பக்கம் எண் :

168தொல்காப்பியம்-உரைவளம்

‘தான்’ என்றது தலைவனை. இரவுக்குறியினை ‘அகம்’ என்றார். இரவுக்குறி எயிலகத்தது* என்பதனால் குறியிற் சென்று நீங்குவனெனவே காட்சி அவன் மேற்றன்றிக் குறி மேற்றாம். குறி, மோதிரம் மாலை முத்தம் முதலியன கோட்டினுங் கொடியினும் இட்டு வைத்தனவாம். இவை வருத்தத்திற்கு ஏதுவாம். இது விடியல் நிகழு மென்றற்குப் ‘பொழுது’ என்றார். எனவே காண்பன விடியலிற் காணுமென்றார். ‘மயங்கும்’ என்றதனால் தோழியும் உடன்மயங்கும். அது

“இக்காந்தண் மென்முகைமேல் வண்டன்றஃ திம்முகையிற்
கைக்காந்தண் மெல்விரலாய் காணிதோ-புக்குச்
செறிந்ததுபோற் றோன்றுந் தொடுபொறி யாம்பண்
டறிந்ததொன் றன்ன துடைத்து”1

புகாஅக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழிப் பகாஅ விருத்தின் பகுதிக் கண்ணும்-உண்டிக் காலத்துத் தலைவி யில்லத்துத் தலைவன் புக்கெதிர்ப்பட்டவழி நீக்கி நிறுத்தாத விருந்து ஏற்றுக் கொள்ளும் பகுதிக் கண்ணும்.

எனவே, மனையகம் புகுதற்கு ஒவ்வாத மிக்க தலைவன் புகுந்தால் இஃதொன்றுடைத் தெனத் தேராது தாய் அவனை விருந்தேற்று நீக்கி நிறுத்தற் பகுதியுந் தழீஇயினவாறாயிற்று,

புகாஅக் கால மாதலிற் பகாவிருந் தென்றான்.* விடியற்கால மாயிற் றலைவன் புகானெனவும், புகாக் காலத்துப் புக்க ஞான்றாயின் அவர் விருந்தேற்றுக் கோடல் ஒருதலை யென்று


*தலைவி மனையின் மதிலிடத்தது.

1. கருத்து: காந்தள் போல் மெல்லிய விரலுடைய தலைவியே! இதோ காணப்படுவது காந்தள் முகையில் தங்கிய வண்டன்று. இந்த முகையில் (மொட்டில்) உள்ளே சென்று செறிந்ததுபோற் றோன்றுவது தொடு பொறி (மோதிரம்) ஆகும். இது நாம் முன்னமேயே அறிந்ததொன்றாம் தன்மையுடையதாகும். அதனால் இரவு தலைவன்வந்து தான் வந்ததற்கு அடையாளமாக இத்தொடுபொறியை இம்மொட்டில் வைத்துச் சென்றான் போலும். என் செய்வோம்.

* இதனால் உணவு நேரத்தில் வந்தவரை உணவு கொள்ளச் செய்வது தமிழர் மரபு எனக் கொள்ளலாம்,