பக்கம் எண் :

களவியல் சூ. 17169

புகும் என்றுங் கொள்க. தலைவி காட்சியாசையிற் கலங்கியதற் கேற்பத் தலைவற்குங் காட்சியாசை கூறிற்று. அது,

“கடர்த்தொடீஇ கேளாய் தெருவி னாமாடு
மணற்சிற்றில் காலிற் சிதையா வடைச்சிய
கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி
நோதக்க செய்யுஞ் சிறுபட்டி மேலோர்நா
ளன்னையும் யானு மிருந்தேமா வில்லிரே
யுண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற் கன்னை
யடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்
உண்ணுநீ ரூட்டிவா வென்றாளென யானுந்
தன்னை யறியாது சென்றேன்மற் றென்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்
டன்னாயிவ னொருவன் செய்ததுகா ணென்றேனா
வன்னை யலறிப் படர்தரத் தன்னையான்
உண்ணுநீர் விக்கினா னென்றேனா வன்னையுந்
தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக்
கடைக்கணாற் கொல்வான் போனோக்கி நகைக் கூட்டஞ்
செய்தானக் கள்வன் மகன்”1      (கலி-51)

இது, புகாக் காலத்துப் புக்கானை விருந்தேற்றுக் கொண்டமை பின்னொரு காலத்துத் தலைவி தோழிக்குக் கூறியவாறு காண்க.


1. கருத்து: சுடர்த் தொடியுடைய தோழியே! கேட்பாயாக. முன்னொரு நாள் யாம் சிற்றிலிழைத்து ஆடிய போது அச்சிற்றிலைச் சிதைத்து மாலையையும் பந்தையும் எடுத்துக் கொண்டு ஓடித் துன்புறுத்தினன் ஒரு சிறு பட்டி. அவன் பின்பொருநாள் அன்னையும் யானும் வீட்டில் இருந்தபோது வந்து உண்ணு நீர் வேட்டேன் என்றான். அன்னை என்னைப் பார்த்து நீரூட்டி வா என்றாள். யான் நீரொடு சென்ற போது என் வளையலணிந்த முன் கையைப் பற்றித் தொல்லை தந்தான். உடனே அன்னையே இவன் செய்ததைப் பார் எனக் கூக்குரலிட்டேன். அன்னை வந்து என் என்றாள். யான் உடனே நீர் விக்கினான் என்றேன். அன்னை அவனை முதுகைத் தடவிக் கொடுத்தாள். அப்போது