பக்கம் எண் :

170தொல்காப்பியம்-உரைவளம்

“அன்னை வாழ்க பலவே தெண்ணீ
ரிருங்கடல் வேட்ட மெந்தை புக்கெனத்
தார்மணி நெடுந்தேர் நீவி யானுமோர்
எல்லமை விருந்தின னென்ற
மெல்லம் புலம்பனைத் தங்கென் றோளே”1

இது தோழி கூற்றுமாம்.

‘ஒன்றிய தோழி’ யென்றதனால் தோழி கூற்று வந்துழிக் காண்க.

“மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை
புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரயத்துச் செலீஇயரோ வன்னை
யொருநா, ணகைமுக விருந்தினன் வந்தெனப்
பகை முகவூரிற் றுஞ்சலோ விலளே”2      (குறுந்-292)


அவன் என்னைக் கொல்வதுபோல் கடைக்கண்ணால் பார்த்துச் சிரித்தான்.

1. கருத்து: என் தந்தை கடலில் மீன் வேட்டைக்குப் புக்கானாக மெல்லம் புலம்பனானவன் வந்து இவ்விரவில் யான் விருந்தினனாக வந்தேன் என்றானாகத் தாயும் அப்படியே தங்குக என்றாள். தாய் பல காலம் வாழ்க.

2. கருத்து: தோழீ! ஒரு நாள் நம் தலைவன் விருந்தாக நம் வீட்டிற்கு வந்தானாக அன்று தொடங்கி நம் தாயானவள் ஐயப்பட்டுப் போர்க்களத் தருகுள்ள ஊரார் தூங்காதது போலத் தூங்காமல் காத்து வருகிறாள். நீராடச் சென்ற ஒரு பெண் நீர்வழி வந்த பசுங்காயைத் தின்ற தவறுக்காக அவள் தந்தை எண்பத்தொரு யானைகளுடன் அவள் போற் பொன்னாற் செய்யப்பட்ட பாவை ஒன்றைத் தண்டமாக இறுப்பவும் கொள்ளானாய் அப் பெண்ணைக் கொலை செய்த நன்னன் என்பான் செல்லும் நரகத்தில் நம் தாய் சேர்வாளாக.