பக்கம் எண் :

களவியல் சூ. 17171

இது புகாக் காலத்துத் தலைமை மிக்க தலைவன் புக்கதற்கு விருந்தேலாது செவிலி இரவுந் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறியது.

வேளாண் எதிரும் விருந்தின் கண்ணும்-அங்ஙனம் விருந்தா தலேயன்றித் தலைவி வேளாண்மை செய்ய எதிர் கொள்ளக் கருதுதல் காரணத்தால் தோழி அவனை விருந்தேற்றுக் கோடற் கண்ணும்.

என்றது, தலைவி அவற்கு உபகாரஞ் செய்யக் கருதி அதனைக் குறிப்பாற் கூறத் தோழி அவனை விருந்தாய்த் தங்கென்னும்.

(உ-ம்)

“நாள்வலை முகந்த கோள்வல் பரதவர்
நுணங்குமண லாங்க ணுணங்கப் பெய்ம்மார்
பறிகொள் கொள்ளையர் மறுக வுக்க
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
யெல்லை தண்பொழிற் சென்றெனச் செலீஇயர்
தேர்பூட் டயர வேஎய்வார் கோற்
செறிதொடி திருத்திப் பாறுமயிர் நீவிச்
செல்லினி மடந்தை நின்றோழியொடு மனையெனச்
சொல்லிய வளவை தான்பெரிது கலிழ்ந்து
தீங்கா யினளிவ ளாயிற் றாங்காது
நொதுமலர் போலப் பிரியிற் கதுமெனப்
பிறிதொன் றாகலு மஞ்சுவ லதனாற்
சேணின் வருநர் போலப் பேணா
யிருங்கலி யாணரெஞ் சிறுகுடித் தோன்றின்
வல்லெதிர் கொண்டு மெல்லிதின் வினைஇத்
துறையு மான்றின்று பொழுதே சுறவு
மோதமல்க கடலின் மாறா யினவே
யெல்லின்று தோன்றல் செல்லா தீமென
வெமர் குறை கூறத் தங்கி யேமுற
விளையரும் புரவியு மின்புற நீயு