பக்கம் எண் :

172தொல்காப்பியம்-உரைவளம்

மில்லுறை நல்விருந் தயர்த
லொல்லுதும் பெருமநீ நல்குதல் பெறினே” 1      (அகம்-300)

இதனுள், ‘தான் பெரிது கலுழ்ந்து தீங்காயினள்’ எனவே அக்குறிப்புத் தலைவன் போகாமற் றடுப்பக் கூறியதென்று உணர்ந்து தோழி கூறினாள்.

வாளாண் எதிரும் பிரிவினானும்-வாளாண்மை செய்தற்கு ஒத்த பிரிவு தோன்றிய வழியும்.

ஆண்டுத் தலைவி மேற்றுக் கிளவி. மூவகைப் பிரிவினும் பகை வயிற் பிரிவு விதந்தோதி அதிகாரப்பட்டு வருகின்ற களவினுள் அவை நிகழப்பெறா. இதுவாயின் வரைவிடை வைத்துப் பிரியவும் பெறும் அரசர்க்கு இன்றியமையாத பிரிவாகலின் என்பது கருத்து. ஓதலுந் தூதும் வரைவிடை வைத்துப் பிரிவிற்குச் சிறந்தில வென்றானாம். இப்பிரிவு அரசர்க்கு உரித்தென்பது ‘தானே சேறலும்’ (27) என்னும் சூத்திரத்தாற் பெறுதும்.

வாளாண்மைக்கு ஏற்ற பிரிவெனவே முடியுடை வேந்தரே வலிற் பிரியும் அரசர் கண்ணது இப்பிரிவென்க. சிறுபான்மை அவ்வேந்தற்கும் உரித்து. ‘வெளிப்படை தானே’ (141) என்பதனுள் இப்பிரிவில்லை என்பராதலின்; அது

"பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர்
வகைகொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ


1. கருத்து: பெரும! நீ நின்தேரினின்றும் தலைவியை இறக்கி நின் தோழியொடு மனைக்குச் செல்க எனச் சொல்லிய அளவில், அவள் பெரிதும் கவலையுற்றாள். அக் கவலையைப் பொருட்படுத்தாமல் ஏதிலர்போல நீ பிரியின் அவள் இறப்பினும் இறப்பாள் என நான் அஞ்சுகிறேன். எனவே என் சொல்லைக் கேட்பாயானால், நீ எம் சீறூருக்குவரின் எங்கள் வீட்டினர் நின்னை அழைத்து வினாவி நீபோதற்கு வரும் இடையூறுகளாக பொழுது மயங்குதல், கடலலை பெருகிக் கரையேறுவதால் அதனாலடித்து வரப்பட்ட சுறாக்கள் பகையாதல், பகலொளி மறைந்து இருள் வருதல் முதலிய சொல்லித் தங்கும்படிக் கூறுவர். நீயும் இன்பம் எய்துமாறு எம் வீட்டில் நல்ல விருந்தாக நின்னை ஏற்று உபசரிப்போம்.