பக்கம் எண் :

களவியல் சூ. 17173

புகையெனப் புதல்சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா
முகைவெண்ப னுதிபொர முற்றிய கடும்பனி”1      (கலி-31)

இதனுட் பனியெதிர் பருவங் குறிஞ்சியாகலிற் களவிற் பிரிந்தான் வாளாணெதிரும் வென்றி தோழிக்குத் தலைவி கூறியவாறு. இஃது அவன்வயிற் பரத்தைமை கருதாதது.

நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற் கண்ணும்-தலைவிக்கு இன்றியமையாத நாணுத்தான் அவள் நெஞ்சினை அலைத்தலின் அவள் அந்நாணினைக் கைவிடுதற் கண்ணும், அஃது உடன் போக்கினாம் வரைவுகடாவும் வழியும் வேட்கை மீதூர்ந்து நாண் துறந்துரைத்தல் போல்வன.

“அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டுழந்தன்று மன்னே யினியே
வான்பூங் கொம்பி னோங்குமணற் சிறுசிறை
தீம்புன னெரிதர வீந்துக் காங்குத்
தாங்கு மளவைத் தாங்கிக்
காம நெரிதரக் கைந்நில் லாதே” 2      (குறுந்-149)

இஃது உடன்போக்கு வலித்தமையின் நாண் துறந்து கூறியது.

வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர்கிளவி புல்லிய எதிரும்-வரைதல் விருப்பினால் தோழி தலைவற்கு வரைவு கடாய்க் கூறிய புரைதீர் கிளவியைத் தலைவி பொருந்தி நின்றே இயற்பழித்தற்கு மறுத்தாள்போல் நிற்கும் எதிர் மறையையும்.


1. கருத்து: பூ மொட்டுப் போலும் மேல்வாய்க் கீழ்வாய்ப் பற்கள் பொரும்படி புதலைச் சூழ்ந்து மூடும் பனியானது. பகைவென்று திறை கொண்ட தேர்மேல் வருபவரது வகையமைந்த தலைமையமைந்த அழகைத் துய்க்க விடுமோ? விடாது.

2. கருத்து: நம் நாணம் மிக இரங்கத் தக்கது. இதுநாள் வரை நம்மோடிருந்து உழன்று வந்தது. இப்பொழுது பூங்கொம்புகளையுடைய மணலின் சிறிய கரையானது நீரலை நெரிக்க நெரிக்கச் சிறிது சிறிதாகக் கரைந்தது போல காமம் நெரிக்க நெரிக்க கையகப் படாமல் ஒழிந்தது.