வரைவு உடன்படுதலும்-தலைவற்குத் தலைவி தமர்வரை வுடம்பட்டதனைத் தலைவி விரும்புதலையும்; (உ-ம்) “இலையமர் தண்குளவி யேய்ந்த பொதும்பிற் குலையுடைக் காந்த ளினவண் டிமிரு மலையக நாடனும் வந்தான்மற் றன்னை யலையு மலைபோயிற் றின்று” 1 (ஐந்-எழு-3) “ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர் தமிய ருறங்குங் கௌவை யின்றா யினியது கேட்டின் புறுக விவ்வூரே முனாஅ, தியானையங் குருகின் கானலம் பெருந்தோ டட்ட மள்ள ரார்ப்பிசை வெரூஉங் குட்டுவன் மரந்தை யன்னவெங் குழல்விளங் காய்நுதற் கிழவனு மவனே” 2 (குறுந்-34) தமரான் ஒறுக்கப்பட்டு ஓவாராய்த் துயருழத்தல் ஆகாதென ஆற்றுவிக்குஞ் சொற்களான் மறுத்துரைப்பவுந் தேறாராய்த் தனித்து இருப்பார் உறக்கங் காரணமாக எழுந்த கௌவை கேளாது வரைந்தெய்திய மாற்றங் கேட்டு இவ்வூரும் இன்புறுக என்பதாம். ஆங்கதன் புறத்துப் புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇ-அவன் வரைவு வேண்டினவிடத்து அவ்வரைவு
1. கருத்து: இலையுடைய காட்டு மல்லிகை பரந்த சோலையில் காந்தட் குலையில் வண்டுகள் ஒலிக்கும் படியான மலை நாடனும் வரைவொடு வந்தான். இனி நம்மைத் தாய் அலைக்கும் அலையும் போயிற்று. 2. கருத்து: விட்டு நீங்காது உடன் இருக்கும் தாயர் கண்டிக்கவும், தலைவர் மணம் பேசிவரத் தந்தையர் மறுப்பவும் தனித்துத் துயர் உறும் மகளிர் இனி இனிய இவ்வுரை கேட்டு இன்புறுக. அவ்வுரையாவது வண்டாழங் குருகுகள் பகைவரையட்ட வீரர் ஆர்ப்பரிக்கும் ஒலிகேட்டு அஞ்சும் படியான குட்டுவன் மரந்தை நகர் போலும் வளமிக்க தலைவிக்கு உரிய தலைவன் தான் காதலித்த அவனே யாவான் என்பதே. |