பக்கம் எண் :

176தொல்காப்பியம்-உரைவளம்

புறத்ததாகியவழித் தலைவி தன்னுயர்பு உண்டாகத் தோன்றியது மறுத்தலோடே முற்கூறியவற்றைத் தொகுத்து:

‘அதன் புறம்’ எனவே அதற்கு அயலாகிய நொதுமலர் வரைவாயிற்று. தலைவி தன் குடிப் பிறப்புங் கற்பும் முதலிய உயர்ச்சிக்கு ஏற்ப அதனை மறுத்துத் தலைவன் வரையுமாறு நீ கூறெனத் தோழிக்குக் கூறுமென்றற்குப் ‘புரைபட வந்த மறுத்தல்’ என்றார்.

“வாரி நெறிப்பட் டிரும்புறந் தாஅழ்ந்த
வோரிப் புதல்வ னழுதன னென்பவோ
புதுவ மலர்தைஇ யெமரென் பெயரால்
வதுவை யயர்வாரைக் கண்டு மதியறியா
வேழையை யென்றகல நக்குவந் தீயாய்நீ
தோழி யவனுழைச் சென்று;
சென்றியா னறிவேன் கூறுக மற்றினி
சொல்லறியாப் பேதை மடவைமற் றெல்லா
நினக்கொரூஉ மற்றென் றகலகலு நீடின்று
நினக்கு வருவதாக் காண்பா யனைத்தாகச்
சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு
தருமணற் றாழப்பெய் தில்பூவ லூட்டி
யெருமைப் பெடையோ டெமரீங் கயரும்
பெருமண மெல்லாந் தனித்தே யொழிய
வரிமணன் முன்றுறைச் சிற்றில் புனைந்த
திருநுத லாயத்தார் தம்முட் புணர்ந்த
வொருமணந் தானறியு மாயி னெனைத்தும்
தெருமரல் கைவிட் டிருக்கோ வலர்ந்த
விரிநீ ருடுக்கை யுலகம் பெறினும்
அருநெறி யாயர் மகளிர்க்கு
இருமணங் கூடுத லில்லியல் பன்றே”1      (கலி-114)

எனவரும்


1. கருத்து. இஃதோர் உரையாடல் வகையில் அமைந்த பாடல்.

தலைவி: தோழீ! தலைவன்பால் சென்று நம்மவர் என் பெயரைச் சொல்லி புதுமலர் புனைந்து எனக்குத்