பக்கம் எண் :

களவியல் சூ. 17177

“மள்ளர் குழீஇய விழவி னானும்”      (குறுந்-31)

என்பதுமாம்.

இச் சூத்திரத்து உருபும் எச்சமுமாயவற்றைக் ‘கிழவோண்மேன’ என்பதனோடு முடித்து, முற்றிற்குக் கிளவியென ஒரு பெயர் வெளிப்படுத்து முடிக்க. புல்லிய எதிரையும் உடன்படுதலையும் மறுத்தலுடன் தொகுத்தது.

கிழவோள் மேன என்மனார் புலவர்-தலைவியிடத்தன கிளவியென்று கூறுவர் புலவர் என்றவாறு.

வெள்.

இது தோழியின் உடன்பாடு பெற்றுத் தலைமகளைக் கூடிய தலைவன் தலைவியை மணந்து கொள்ளுங்காறும் நிகழ்வனவற்றைத் தொகுத்துக் கூறுகின்றது.


திருமணம் அயர்தலைக் கண்டும் நீ வாளா இருத்தலயல் ஊரவர் மயிர் புறம்புதைய உள்ள மகன் தான் மணம் முடிக்க இயலாது அழுதனன் என்று சொல்வார்களோ. நீ அறிவுடையாய் இல்லை என்று சிரித்துச் சொல்லி வருக.

தோழி: அவ்வாறே சென்று சொல்லி வருவேன். இனி எவ்வாறு சொல்ல வேண்டும் என்பதைக் கூறு.

தலைவி: மடவாய்! நீ அவனிடம் சென்று இப்படிச் சொல். ஏடா! நின் குரவரிடம் சென்று அவள் வதுவை எனக்கேயாக வேண்டும் என்று சொல்ல அறியாதவனானாய். நீ மடவை. அதனால் அவள் மணம் நினக்குரியதன்றாய் விடும். அது நீண்ட காலத்தில் இல்லை அவள் மணம் நினக்கே வருவதாக நினைப்பாயாக என்று இப்படி நீ சொல்லும் சொல் இருத்தல் வேண்டும். நீ சொல்வதை அவன் ஏவலாகக் கொள்ளுமாறு கூறுக. இன்னும் கேள். ஆயத்தின் நீங்கி அவனுடன் புணர்ந்த ஒரு மணத்தை நம் நெஞ்சம் அறியும். நம் சுற்றத்தார் நடத்தும் திருமணம் வேறொருவனிடத்ததாய் இருக்க இது இரண்டாவது திருமணமாகும். உலகமே பெறினும் ஆயர் குடிப்பிறந்தார்க்கு இரண்டு திருமணம் இயல்பன்று என்பதை நினைந்து வருந்தும் வருத்தத்தை யான் விடுவேனோ? விடுவேனாயின் யான் பிறந்த குடிக்குப் பழுதுண்டாம். என் கற்பும் நீங்கும்.

தொ.-12