பக்கம் எண் :

178தொல்காப்பியம்-உரைவளம்

(இ-ள்) : பகற்குறி இரவுக்குறியென்னும் இருவகைக் குறிகளும் தப்பிய நிலையிலும், தலைமகளைக் காண இயலாதவாறு பொழுதும் நீட்டித்த நிலையிலும், தான் தலைமகளது இல்லத்திற்குப் புகப்பெறானாகிக் களவொழுக்கத்தின் மீளுதல் இன்மையால் தலைமகளைக் காணுதல் வேண்டும் என்னும் பெருவிருப்பத்தால் மீண்டும் குறியிடத்தே சென்று காணப் பெறாது கலக்கமுற்று வேட்கையால் மயங்கிச் செயலற்று நிற்கும் காலத்தினும், உணவுண்ணுங் காலத்தில் தலைமகளது மனைக்கண் விருந்தினனாகப் புகுந்து தலைமகளை எதிர்ப்பட்ட போது அவளுடைய சுற்றத்தாரால் தள்ளத் தகாத விருந்தாக ஏற்று உபசரிக்கப் பெற்ற நிலையிலும் தலைமகளும் தோழியும் விருந்து உபசரிப்பாராக விரும்பி எதிரேற்ற நிலையிலும், தாளாண்மையினை மேற்கொண்டு வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரியும் நிலையிலும், களவு அலராகி வெளிப்பட்டு விடுமோ என்னும் அச்சத்தோடு நாணம் தலைவி நெஞ்சினை வருத்துதலால் தலைமகளை விலகி ஒழுகுதற் கண்ணும், தலைவியை மணந்து கொள்ளுதல் வேண்டித் தோழி கூறிய குற்றந் தீர்ந்த சொல்லினையேற்றுப் பொருந்திய எதிர்ப்பாட்டின் கண்ணும், தோழி கூறிய சொற் கேட்டு வரைவுடம்படுதற் கண்ணும், அங்கு அவ்வரைவு புறத்ததாய வழிக் குற்றம் பட நேர்ந்த தமர் வரைவு மறுத்தலொடு கூட இங்குக் கூறப் பட்டன வெல்லாம் தலைமகன் மேலன என்பர் ஆசிரியர், (எ-று),

இந் நூற்பாவில் ‘தான் அகம்புகாஅன்’ என் புழித் ‘தான்’ தலைவனை யாகலானும் ‘நாணு நெஞ்சலைப்ப விடுத்தல்’ என்புழி ‘விடுத்தல்’ தொழிலாகலானும் வரைதல் வேண்டித் தோழி செப்புதல், தலைவனை நோக்கியாகலானும் ‘கிழவோன் மேன’ என இளம்பூரணர் கொண்ட பாடமே தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதென்பதும், ‘கிழவோள் மேன’ என நச்சினார்க்கினியர் கொண்ட பாடம் அத்துணைப் பொருத்தமுடைய தன்றென்பதும் நன்கு புலனாகும். ‘கிழவோன் கூற்று’ என்னாது ‘கிழவோன் மேன’ எனப் பொதுப்படக் கூறினமையின் இவ்விடங்களில் தலைவனது உள்ள நிகழ்ச்சியும் கூற்றும் உடன் கொள்ளப்படும்.

சிவ.

இச் சூத்திரம் தலைவன் தலைவி இருவர்க்கும் உரியதாகக் கொள்ளலாம். ‘கிழவோன் மேன’ என இளம்பூரணரும் ‘கிழ