பக்கம் எண் :

களவியல் சூ. 18179

வோள் மேன’ என நச்சினார்க்கினியரும் கொண்டாலும் இளம்பூரணர் பாடமே நன்று. கிழவோன் கூற்று என்னாது ‘கிழவோன் மேன’ என்றமையால் ‘கிழத்தி மேன’ எனவும் கொள்ளலாம் எனக் கொண்டு இருவர்க்கும் உரிய நிலையிலேயே உரையும் உதாரணங்களும் கொள்ளலாம்.

கிழவன் என்பது ‘கிழவோன்’ எனவரும். அன் விகுதி ஆன் ஆகிப் பின் ‘ஓன்’ ஆகும்.

தலைவிக்குக் கூற்று நிகழுமாறு

106. காமத் திணையிற் கண்ணின்று வரூஉம்
 நாணும் மடனும் பெண்மைய ஆகலின்
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள்வயின் ஆன.      (18)

ஆ. மொ.

இல.

For the modesty and simplicity in the act of love belong to the feminine nature, her amorousness will be known only by gesture and environment in accordance with the code of love.

இளம்.

என்பது மேல் தலைவற்குரிய கிளவி கூறி. இனித் தலைவிக் குரிய கிளவி கூறுகின்றாராகலின் முற்பட அவள், தலைவனைக் கண்ணுற்றவழிவரும் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

தலைவியிடத்து நிலைமை பெற்று வருகின்ற நாணமும் மடனும் பெண்மைக்கு அங்கமாகலின், காமவொழுக்கத்தின்கண் குறிப்பினானும் இடத்தினானுமல்லது வேட்கை புலப்பட நிகழாது தலைவியிடத்து என்றவாறு.

காமத்திணை என்பதனைக் குறிப்பென்பதற்கு முன்னே கூட்டியுரைக்க. அச்சமும் இயல்பன்றோவெனின், அதுவும் வேட்கைக் குறிப்பினான் நீங்குமென்ப. அச்சமுள்வழி