பக்கம் எண் :

182தொல்காப்பியம்-உரைவளம்

வெள்.

ஒத்த அன்பினரான தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டுக் கண்ணுற்ற நிலையில் தலைமகள் பால் வேட்கை தோன்றுமாறு கூறுகின்றது.

(இ-ள்) : அன்பின் ஐந்திணை யொழுகலாற்றில் தலைமகளது கண்ணின் குறிப்புடன் ஒன்றி வெளிப்படும் நாணமும் மடனும் ஆகிய இவை பெண்மைக்குரிய இன்றியமையாப் பண்புகளாதலின் தலைவியின் வேட்கை, குறிப்பினாலும் இடத்தினாலும் அன்றிக் கூற்றினால் வெளிப்படுமளவுக்கு அவ்விடத்தில் முறைமைப்பட மிக்குத் தோன்றுதல் இல்லை எ-று.

வேட்கை குறிப்பினும் இடத்தினும் அல்லது அவள் வயின் நெறிப்பட வாரா என இயையும். தலைமகள் உள்ளத்தே தோன்றும் வேட்கையுணர்வுகள் அவளது சொல்லால் வெளிப்படாமைக்குக் காரணம் கூறும் நிலையில் அமைந்தது.

“காமத் திணையிற் கண்ணின்று வரூஉம்
நாணமும் மடனும் பெண்மைய வாதலின்”

எனவரும் தொடராகும். காமத்திணை-காமப் புணர்ச்சி, அன்பின் ஐந்திணை யொழுகலாறு. கண்நின்று வருதலாவது கண்ணின் குறிப்புடன் ஒன்றி நின்று வெளிப்படுதல். பெண்மைய-பெண்மையிடத்தன. குறிப்பு வினைமுற்று. அவள் என்றது தலைவியை.

107. காமம் சொல்லா நாட்டம் இன்மையின்
 ஏமுற இரண்டும் உளஎன மொழிப      (19)

ஆ. மொ.

இல.

For there is no look which cannot reveal the love, the two (modesty and simplicity) exist for the safety.

இளம்.

என்பது, மேலதற்கோர் புறனடையுணர்த்துதல் நுதலிற்று.

வேட்கையுரையாத கண் உலகத்தின்மையால் தலைவன்