108. | சொல்எதிர் மொழிதல் அருமைத் தாகலின் | | அல்ல கூற்றுமொழி அவள்வயி னான (20) |
ஆ. மொ. இல. As speaking against his words is rare on her part, the expressions of non-speech devolve on her. இளம். என்பது, இதுவும் தலைவி மாட்டு ஒரு கூற்றுச் சொல் நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. தலைவன் இயற்கைப் புணர்ச்சி கருதிக் கூறுஞ் சொல்லெதிர் தான் வேட்கைக் குறிப்பினளாயினும் அதற்குடம்பட்ட நெறியைக் கூறுதல் அருமையுடைத்தாதலான் அதற்கு உடம்பாடல்லாத கூற்றுமொழி தலைவியிடத்தன என்றவாறு; என்றது இசை வில்லாதாரைப் போலக் கூறுதல். (உ-ம்) “யாரிவன் என்னை விலக்குவான் நீருளர் பூந்தா மரைப்போது தந்த விரவுத்தார்க் கல்லாப் பொதுவனை நீமாறு நின்னொடு சொல்லலோம் பென்றார் எமர்”1 (கலித்-112) எனவரும் இதன்பின், “.................................. எவன் கொலோ
1. கருத்து: என்னை விலக்குவானாகிய இவன் எனக்கு என்ன உறவுடையவன்? (என்று புலந்து கூறுவாள் போல் கூறி நேரே) தாமரைப் பூவினைக் கொடுத்த கல்லாத இடையர்குலப் பொதுவனே! எம் சுற்றத்தார் நும் களவொழுக்கத்தை அறிந்தார்போல எம்மொடு பேசுதலை விடுக என நின்னிடம் கூறினார். ஆதலின் நீ இவ்விடம் விட்டுப் பெயர்க. |