பக்கம் எண் :

186தொல்காப்பியம்-உரைவளம்

மாயப் பொதுவன் உரைத்த உரையெல்லாம்
வாயாவ தாயின் தலைப்பட்டாம் பொய்யாயின்
சாயலின் மார்பிற் கமழ்தார் குழைத்தநின்
ஆயித ழுண்கண் பசப்பத் தடமென்தோள்
சாயினும் ஏஎர் உடைத்து”      (கலித்-112)

என உடம்பாடு கூறினாளாதலின் முற்கூறியது அல்ல கூற்றாயிற்று.

நச்.

இது நாணும் மடனும் பெரும்பான்மை நிகழாத கூற்றுத் தோழிக்குத் தலைவி கூறுமென்கின்றது.

(இ-ள்) : எதிர்சொல்-அங்ஙனம் மடனும் நீங்கிய சொல்லை; அவள்வயின் மொழிதல் அருமைத்து அல்ல ஆகலின்-தோழியிடத்துக் கூறுதல் அருமையுடைத்தல்ல வாகையினாலே; கூற்று மொழி ஆன-குறிப்பானன்றிக் கூற்றாற் கூறும் மொழி தலைவிக்குப் பொருந்தின என்றவாறு.

எதிர்தல்-தன்றன்மை மாறுபடுதல், “ஒன்றிய தோழியொடு” (41) என அகத்திணையிற் கூறுதலானும், ‘தாயத்தினடையா (221) எனப் பொருளியலிற் கூறுதலானும் அவள்வயின் நாணும் மடனும் நீங்கிய சொல்லைக் கூறுதலும் பொருந்துமென்றான். அவை முற்காட்டிய உதாரணங்களுள்,

“கூடுதல் வேட்கையாற் குறிபார்த்து’      (கலி-46)

எனவும்,

“வளைமுன்கைபற்றி நலியத் தெருமந்திட்டு      (கலி-51)

எனவும்,

“காமநெரிதரக் கைந் நில்லாதே”      (குறுந்-149)

எனவும்,

கூறிய வாற்றானும், மேற் கூறுகின்ற உதாரணங்களானும் நாணும் மடனும் நீங்கிக் கூற்று நிகழ்ந்தவாறுணர்க.


1. கருத்து: மாயப் பொதுவனாகிய அவன் உரைத்த உரையெலாம் எப்படிப் பட்டனவோ? உண்மையான ஆயின் அவனொடு மனைவாழ்க்கைப் பட்டோமாவோம். பொய்யாயின் நின் உண்கண் பசலையடைய மென்தோள்கள் மெலியினும் உன்மேனி ஓர் அழகுடைத்தேயாம்.