பக்கம் எண் :

198தொல்காப்பியம்-உரைவளம்

இதனுள் ‘பின்னும் வருவன் என்றிருந்தேன், அதனான் எள்ளினேன்’ என்பது கருத்து.

“...................................
ஏறிரங் கிருளிடை இரவினிற் பதம்பெறாஅன்
மாறினென் எனக்கூறி மனங்கொள்ளுந் தானென்ப
கூடுதல் வேட்கையாற் குறிபார்த்துக் குரல்நொச்சிப்
பாடோர்க்கும் செவியோடு பைதலேன் யானாக” 1      (கலித்-46)

இஃது எள்ளினாயென நினைத்தான் என்ற வழிக் கூறியது.

விட்டுயிர்த் தழுங்கியதற்குச் செய்யுள்:

பிணிநிறந் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க
மணிமலை நாடன் வருவன்கொல் தோழி
கணிநிற வேங்கை மலர்ந்துவண் டார்க்கும்
மணிநிற மாலைப் பொழுது”2       (திணைமொழி-9)

எனவும்,

“மரையா உகளும் மரம்பயில் சோலை
உரைசார் மடமந்தி ஓடி உகளும்
புரைதீர் மலைநாடன் பூணேந் தகலம்
உரையா உழக்கும்என் நெஞ்சு”3      (கைந்நிலை-6)

எனவும் வரும்.

நொந்து தெளிவொழித்தற்குச் செய்யுள்:

“மன்றத் துறுகற் கருங்கண் முசுஉகளுங்
குன்றக நாடன் தெளித்த தெளிவினை


1. கருத்து: பக்கம் 164-ல் காண்க.

2. கருத்து: தோழீ! மணிமலை நாடன் பிணி நிறமாகிய பசலை நீங்கி தோள் பருக்கக் காலத்தைக் கணிக்கும் பொன்னிற வேங்கை மலரில் அமர்ந்து வண்டார்க்கும் இந்த அழகிய மாலைப் பொழுதில் வருவானோ?

3. கருத்து: காட்டுப்பசு துள்ளித் திரியும் சோலையில் மந்திகள் துள்ளியோடும்படியான மலை நாடனது மார்பானது என் நெஞ்சைத் தேய்த்து அங்கேயே நடமாடிக் கொண்டிருக்கும்.