பக்கம் எண் :

களவியல் சூ. 21199

நன்றென்று தேறித் தெளிந்தேன் தலையளி
ஒன்றுமற் றொன்றும் அனைத்து”1      (ஐந்திணையெழு-9)

எனவரும்.

அச்சம் நீடினும் என்பதற்குச் செய்யுள்:

“மென்தினை மேய்ந்த தறுகட் பன்றி
வன்கல் அடுக்கத்துத் துஞ்சு நாடன்
எந்தை யறிதல் அஞ்சிக்கொல்
அதுவே மன்ற வாரா மையே” 2      (ஐங்குறு-261)

எனவும்,

“மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லர்எங் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழிய ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே”3      (குறுந்-87)

எனவும் வரும்.

பிரிந்த வழிக் கலங்கியதற்குச் செய்யுள்,

“வருவது கொல்லோ தானே வாராது
அவணுறை மேவலின் அமைவது கொல்லோ


1. கருத்து: மன்றத்து உற்ற கல்லில் முசுக்கலை துள்ளித் திரியும்படியான குன்றநாடன் இயற்கைப் புணர்ச்சியின்போது தெளிவித்த தெளிவினை எனக்கு நல்லதைச் செய்யும் என்று தெளிந்தேன். அந்த ஒன்றும் எப்போதும் எனக்கு நல்லதையே செய்யும் அத்தன்மையதாகும்.

2. கருத்து: தினை மேய்ந்த பன்றி மலையடுக்கத்து உறங் கும்படியான மலை நாடனாகிய தலைவன் இங்கு வாராமைக்குக் காரணம் எம் தந்தையை அஞ்சியதே போலும்! ஆம். அதுவேதான் உறுதியான காரணமாம்.

3. கருத்து: ஊர் மன்றத்துள்ள கடம்ப மரத்துத் தெய்வம் கொடியவரை அழிக்கும் என்பர். சிறிதும் கொடிய ரல்லர் எம் தலைவர். என் நுதல் தானே பசந்தது. என் தோள்தானே நெகிழ்ந்தது. இதற்கு அவர் காரணர் அல்லர்.