புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை இருவி இருந்த குருவி வெருவுறப் பந்தாடு மகளிரிற் படர்தருங் குன்றுகெழு நாடனொடு சென்றஎன் நெஞ்சே”1 (ஐங்குறு-295) எனவும், “அதுகொல் தோழி காம நோயே வதிகுரு குறங்கு மின்னிலைப் புன்னை உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர் மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே” 2 (குறுந்-5) எனவும், “மணிநிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன் அணிநலம் உண்டகன்றான் என்றுகொ லெம்போல் திணிமண லெக்கர்மேல் ஓதம் பெயர்ந்து துணிமுந்நீர் துஞ்சா தது”3 (ஐந்திணையெழு-60) எனவும், “கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக் கறிந்து”4 (குறள்-1127) எனவும்,
1. கருத்து: தினைப் புனங் காப்பார் மூட்டிய கொள்ளிக்கு அஞ்சிய மயில் புகலிடம் சென்று பின்பு கதிர் கொய்த தாளில் தங்கிய குருவிகள் அஞ்சுமாறு தன் சிறகை விரித்துப் பந்தாடு மகளிர்போல் ஆடும் குன்ற நாடனொடு சென்ற என் நெஞ்சம் திரும்பி வருமோ வாராது அங்கேயே அமைவதுவோ அறியேன். 2. கருத்து: தோழீ! தலைவன் (புலம்பன்) பிரிந்தானாக என் கண்கள் உறங்காவாயின. இதுதான் காமநோயோ. 3. கருத்து: மணல் எக்கர் மேல் அலை பாயும் கடலானது இரவுக்குறி சேர்ந்து வந்து தூங்காதே எம்மைப்போல கொண்டிருப்பதற்குக் காரணம் எம்மைப்போலத் தனது கடற்கரைச் சேர்ப்பன் தன் நலன் உண்டு நீங்கினான் என்பதோ. 4. கருத்து: காதலர் கண்ணிடத்திருத்தலால் என் கண்ணையும் மையெழுத மாட்டேன். ஏன் எனின் அது அவரை மறைக்கும். |