பக்கம் எண் :

களவியல் சூ. 21201

“நெஞ்சத்தார் காதல வராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து”1      (குறள்-1128)

எனவும் வரும்.

உறங்காமையும், உண்ணாமையும் கோலஞ் செய்யாமையும் வருத்தம் பிறவுஞ் சொல்லுதல், இவ்வழி நீ வருந்தாதி நின் மாட்டு அன்பு பெரிதுடையன் எனத் தோழி ஆற்றுவித்தவழி ஆற்றாமையாற் கூறியதற்குச் செய்யுள்:

“சிறுதினை மேய்ந்த தறுகட் பன்றி
துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும்
இலங்குமலை நாடன் வரூஉம்
மருந்தும் அறியுங்கொல் தோழியவன் விருப்பே” 2      (ஐங்குறு-262)

எனவரும்.

பெற்றவழி மலியினு மென்பதற்குச் செய்யுள்:

“அம்ம வாழி தோழி பன்மாண்
நுண்மணல் அடைகரை நம்மோ டாடிய
தண்ணந் துறைவன் மறைஇ
அன்னை அருங்கடி வந்து நின்றோனே” 3      (ஐங்குறு-115)

எனவும்,

“முளைவளர் முதல” என்னும் அகப்பாட்டினுள்

“.............................வேட்டோர்க்கு


1. கருத்து: நெஞ்சத்தில் காதலர் இருத்தலால் சூடான உணவை அவர்க்குச் சுடும் என்றஞ்சி உண்ண மாட்டேன்.

2. கருத்து: தோழீ! தினைமேய்ந்த பன்றி தன் துணையுடன் வதியும் மலைநாடன் வருவதே என் நோய்க்கு மருந்தாம். இதை அவன் உள்ளம் (விருப்பம்) அறியுமோ.

3. கருத்து: தோழீ! கேட்பாயாக. நுண்ணிய மணல் சேர்ந்த கடற்கரையில் நம்மொடு ஆடிய தண்ணந் துறைவன் இன்று மறைந்து கடத்தற்கரிய தாயின் காவலமைந்த வீட்டின் புறத்தே வந்து நின்றான்.