ஆ. மொ. இல. Because of the command of God which is being one with them and high above them. The lover and the lady-love meet together. They being equal in status; The lover being superior is not however forbidden. பி. இ. நூ. அவிநயம்: (யா. வி. ஒழிபியல் 95) ஊழ்வினை வயத்தால் ஒத்த இருவரும் உள்ளம் நெகிழ்ந்து காதல் வயப்படுவர் முறைசெய் வினையது முறையா உண்மையின் ஒத்த இருவரும் உள்ளம் நெகிழ்ந்து இறை. 2 அதுவே, தானே அவளே தமியர் காணக் காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல் நம்பி. 118 புணர்ப்பதும் பிரிப்பதும் ஆகிய பால்களுள் புணர்க்கும் பாலுட் பொருவிறந் தொத்து கறைவேற் காளையும் கன்னியும் காண்ப இறையோன் உயரினும் குறைவின்று என்மனார். மா. அ. 7 நிலம் வேறு ஒன்றெனும் நிலைமையர் ஆகி குலன்நலன் திருவுரு குறிக்கோளின் ஒன்றா இறைவனும் இறைவியும் இருமையும் தொடர்ந்து முறைபயில் பான்மை மூதுடை முதல்வன் ஏவலின் கண்ணுறும் இயற்கைக் காட்சி காவலன் உரினும் கடிநிலை யிலவே இல. வி. 487 தொல்காப்பியச் சூத்திரமே. இளம் என்-எனின், இது காமக் கூட்டத்தின் கண் தலைமகனும் தலை மகளும் எதிர்ப்படுந்திறனும் அதற்குக் காரணமும் உணர்த்துதல் நுதலிற்று: |