(உ-ம்) “அடும்பி னாய்மலர் விரைஇ நெய்த னெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்த லோரை மகளி ரஞ்சியீர் ஞெண்டு கடலிற் பரிக்குந் துறைவனோ டொருநா ணக்கு விளையாடலுங் கடிந்தன் றைதேய் கம்ம மெய்தோய் நட்பே” 1 (குறுந்-401) இது வேறுபாடு கண்டு இற்செறித்தமை தன்னுள்ளே கூறியது. “பெருநீ ரழுவத் தெந்தை தந்த கொழுமீ னுணங்கற் படுபுள் ளோப்பி யெக்கர்ப் புன்னை யின்னிழ லசைஇச் செக்கர் ஞெண்டின் குண்டளை கெண்டி ஞாழ லோங்குசினைத் தொடுத்த கொடுங்கழித் தாழை வீழ்கயிற் றூச றூங்கிக் கொண்ட லிடுமணற் குரவை முனையின் வெண்டலைப் புணரி யாயமொ டாடி மணிப்பூம் பைந்தழை தைஇ யணித்தகைப் பல்பூங் கான லல்கினம் வருதல் கௌவை நல்லணங் குற்ற விவ்வூர்க் கொடிதறி பெண்டிர் சொற்கொண் டன்னை கடிகொண் டனளே தோழி பெருந்துறை யெல்லையு மிரவு மென்னாது கல்லென
1. கருத்து: அடும்ப மலரையும் நெய்தல் மலரையும் கலந்து தொடுத்த மாலையுடைய கூந்தலையுடைய நீர் விளையாட்டு மகளிர்க்கு அஞ்சிய குளிர்ந்த நண்டுகள் கடலில் விரைதற்குக் காரணமான துறைத் தலைவனொடு அவள் மெய்யைத் தோய்தற்குக் காரணமான நட்பினால் உண்டான உடல்வேறுபாடு என்றேனும் ஒரு நாள் மகிழ்ந்து விடுதலையும் விலக்கியது. இது வியத்தற்குரியதாம். |