வொண்சுடர் நல்லி லருங்கடி நீவித் தன்சிதை வறித லஞ்சி யின்சிலை யேறுடை யினத்த நாறுயிர் நவ்வி வலைகாண் பிணையிற் போகி யீங்கோர்” தொலைவில் வெள்வேல் விடலையொ டென்மக ளிச்சுரம் படர்தந் தோளே யாயிடை யத்தக் கள்வ ராதொழு வறுத்தெனப் பிற்படு பூசலின் வழிவழி யோடி மெய்த்தலைப் படுதல் செய்யே னித்தலை நின்னொடு வினவுதல் கேளாய் பொன்னொடு புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி யொலிக்குழைச் செயலை யுடைமா ணல்குல் ஆய்சுளைப் பலவின் மேய்கலை யுதிர்த்த துய்த்தலை வெண்காழ் பெறூஉங் கற்கெழு சிறுகுடிக் கானவன் மகளே1 (அகம்-7) என்றன தோற்றப் பொலிவாற் காத்தன. இதற்கும் அவ் விரண்டும் உள.
1. கருத்து: மகட் போக்கிய செவிலி வழியில் மான்பிணை கண்டு வினவியது. பிணைமானே! கானவன் மகளாகிய என் மகளை நோக்கி ”நீ பேதையல்லை; அறிவுடையவள்; முலை அரும்பின; பற்கள் வளர்ந்து விளங்கின; கூந்தல் முடிக்கப்பட அமைந்தது; தழையுடையும் கொண்டாய் அதனால் ஊரில் திரியும் தோழியருடன் எங்கும் போகாதே. இவ்வூர் இடங்கள் காக்கும் தெய்வங்கள் உடையன. இவை காரணமாக நீ காவலில் வைக்கப்பட்டாய். வீட்டின் வாசற்படியிடத்தும் போகாதே. நீ பேதையில்லை; பெதும்பைப் பருவத்தை; ஏன் புறவிடம் போனாய்” என்று யான்கூற அதுகேட்டு அவள் குற்றத்தை நானறிந்தமையுணர்ந்து அஞ்சி வீட்டுக் காவலைக் கடந்து வலையைத் தப்பிய பெண் மான்போல ஒரு தலைவனொடு இச்சுர வழியிற் சென்றனள். வெட்சியாரைப் பின் தொடரும் கரந்தையார்போல அவள் செல்லும் நெறிகளிலெல்லாம் ஓடி அவளைக் காணப் பெறேன். நின்னொடு வினவுவன். கூறுவாயாக. |