தன்குறி தள்ளிய தெருளாக்காலை வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன் பிழைப்பாகத் தழீஇத் தேறலும்-தலைவி தன்னாற் செய்யப்பட்ட குறியிடங்கள் இற்செறிப்பு முதலியகாரணங்களான் இழக்கப்பட்டனவற்றை, இவை இழக்குமென முந்துறவே உணராத காலத்து, முற்கூறிய குறியிடமே இடமாக வந்து தலைவன் கூடாது பெயர்தலால், தமக்குப் பயம்படாத வறுங்களத்தை நினைந்து, அதனைத் தலைவற்கு முந்துறவே குறிபெயர்த்திடப்பெறாத தவறு தன்மேல் ஏற்றிக் கொண்டு, தோழியையும் அது கூறிற்றிலளெனத் தன்னொடு தழீஇக் கொண்டு தலைவி தெளிதற்கண்ணும்: ஆகவே அவன் தவற்றைத் தன் தவறு ஆக்கினளாம். தழீஇ-தோழியைத் தழீஇ அத்தவறு அவன்கட் செல்லாமல் தனதாகத் தேறிளாள். (உ-ம்): “விரியிணர் வேங்கை வண்டுபடு கண்ணியன் றெரியிதழ்க் குவளைத் தேம்பாய் தாரன் அஞ்சிலை யிடவ தாக வெஞ்செலற் கணைவலந் தெரிந்து துணைபடர்ந் துள்ளி வருதல் வாய்வது வான்றோய் வெற்பன் வந்தன னாயி னந்தளிர்ச் செயலைக் காவி லோங்குசினைத் தொடுத்த வீழ்கயிற் றூசன் மாறிய மருங்கும் பாய்புடன் ஆடா மையிற் கலுழ்பில தேறி நீடிதழ் தலைஇய கவின்பெறு நீலங் கண்ணென மலர்ந்த சுனையும் வண்பறை மடக்கிளி யெடுத்தல் செல்லாத் தடக்குரற் குவவுப் பொறையிறுத்த கோற்றலை யிருவிக் கொய்தொழி புனமுநோக்கி நெடிது நினைந்து பைதலன் பெயரலன் கொல்லோ வைதேய்கு அயவெள் ளருவி சூடிய வுயர்வரைக் கூஉங் கணஃதெம் மூரென வாங்கதை யறிவுறன் மறந்தி சின்யானே” 1 (அகம்-38)
1. கருத்து: தலைவி கூற்று. “தோழீ! வான் தோய் வெற்பன் இங்கு (தினைப்புனத்து) வருதல் மெய்ம்மை, தொ.-17 |