பக்கம் எண் :

258தொல்காப்பியம்-உரைவளம்

இதனுள் ஊசன் மாறுதலும் புனமுந் தன்குறி தள்ளிய இடன், மறந்திசின் என்றது தெருளாக்காலை, கூஉங் கண்ணது ஊரென உணர்த்தாமையின்; இடையீடு படுவதன்றி அவன் கண் தவறுண்டோவெனத் தன் பிழைப்பாகத் தழீஇயினாள் இது சிறைப்புறமாக வரைவு கடாயது.

வழுவின்றி நிலைஇய இயற்படு பொருளினும்-வழுப்படுத்தலின்றி நின்ற இயற்பட மொழிதற் பொருண்மைக் கண்ணும்:

‘வழுவின்றி நிலைஇய’ என்றதனால் தோழி இயற்பழித் துழியே இயற்பட மொழிவதென்க. தலைவன் வழுவைத் தோழி கூறியதற்குப் பொறாது தான் இயற்பட மொழிந்ததல்லது, தன் மனத்து அவன் பரத்தைமை கருதுதலுடைமையிற் பொருள் வேறு குறித்தாளாம்.

(உ-ம்)

“அடும்பம னெடுங்கொடி யுள்புதைந் தொளிப்ப
வெண்மணல் விரிக்குந் தண்ணந் துறைவன்
கொடிய னாயினு மாக
வவனே தோழி யென்னுயிர் காவலனே” 1      (ஐங்குறு-144)

“தொடிநிலை நெகிழச் சாஅய்த் தோளவர்
கொடுமை கூறின வாயினுங் கொடுமை
நல்வரை நாடற் கில்லை தோழியென்
னெஞ்சிற் பிரிந்த தூஉமிலரே தங்குறை
நோக்கங் கடிந்ததூஉ மிலரே
நிலத்தினும் பெரிதே நேர்ந்தவர் நட்பே” 2

எனவரும்.


வந்தானாயின் ஊஞ்சல் இல்லாத வறிய இடத்தையும், நீர் தெளிந்து நீலம் புதியதாக மலர்ந்த சுனையையும் கதிர்கள் கொய்யப்பட்ட தாள்கள் உள்ள புனத்தையும் பார்த்து நீள நினைந்து துன்புற்றவனாய்த் திரும்பிப் போகாமல் வருந்துவன் அல்லவா? தினைப்புனலிடத்திருந்து கூப்பிடு தூரத்தது எம் ஊர் என்பதை யான் அறிவுறுத்த மறந்து விட்டேன். அதனால் என் அழகு கெடுக-இது தலைவன் சிறைப்புறத்தானாக தலைவி கூறியது.

1. கருத்து: பக்கம் 217-ல் காண்க.

2. கருத்து: தோழி; தொடி தன் நிலை சாய்ந்து நெகிழத் தோள்கள் அவர் கொடுமை கூறினாலும் வரை