பக்கம் எண் :

களவியல் சூ. 21259

இஃது அகன்று உயர்ந்து தாழ்ந்தவற்றுட் பெரிதாகிய நட்புடையவன் எனக் கூறியது. ஒரு காலைக்கு ஒருகாற் பெருகுமென்றுங் கூறினாளாயினும் நமது நட்புப்போல் ஒரு காலே பெருத்ததில்லையென இரண்டுங் கூறினாள்.

பொழுதும் ஆறும் புரைவது அன்மையின் அழிவு தலைவந்த சிந்தைக் கண்ணும்-தலைவியுந் தோழியுந் தலைவன் இரவுக்குறி வருங்காற் பொழுதாயினும் நெறியாயினும் இடையூறாகிப் பொருந்துதலின்மையின், அழிவு தலைத்தலை சிறப்ப வந்த ஆராய்ச்சிக் கண்ணும்:

ஆண்டும் அவ்விரண்டும் நிகழும்.

(உ-ம்)

“மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே
கொன்றோ ரன்ன கொடுமையோ டின்றே
யாமங் கொளவரிற் கனைஇக் காமங்
கடலினு முரைஇக் கரைபொழி யும்மே
யெவன்கொல் வாழி தோழி மயங்கி
யின்ன மாகவு நன்னர் நெஞ்ச
மென்னொடு நின்னொடுஞ் சூழாது கைம்மிக்
கிறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற்
குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக்
கான நாடன் வரூஉம் யானைக்
கயிற்றுப் புறத்தன்ன கன்மிசைச் சிறுநெறி
மாரி வானந் தலைஇ நீர்வார்
பிட்டருங் கண்ண படுகுழி யியவி
னிருளிடை மிதிப்புழி நோக்கியவர்
தளரடி தாங்கிய சென்ற தின்றே”1      (அகம்-128)


நாடற்குக் கொடுமையில்லை. அவர் என் நெஞ்சை விட்டுப் பிரிந்ததும் இல்லை. நம்மை நோக்கும் நேக்கத்தைத் தமக்குள்ள குறையாகக் கூறும்படித் தவிர்ந்ததும் இல்லை. அதனால் அவர் நட்பு நிலத்தினும் பெரிது.

1. கருத்து: தோழீ! மன்றம் ஒலியடங்கி மனைகளிலுள்ளாரும் துயின்றனர். கொல்வதுபோல நடுயாமம் வந்தது. காமம் கடலினும் பெரிதாய்க் கைகடந்து செல்லும். நாம் இந்நிலையிலிருக்க நம் நெஞ்சம்