காமங் கரைபொழியா நிற்கவும் என்ன நன்றி கருதி இரு வரொடுஞ் சூழாது சென்றது நெஞ்சென இரண்டுங் கூறினாள். மனைமடிந்தன்றென்பது பொழுது; சிறு நெறியென்பது ஆற்றின்னாமை; இதனைப் பொருளியலுட் (210) கூறாது தன்வயினுரிமையும் அவன்வயிற் பரத்தமையும் பற்றி ஈண்டுக் கூறினான். “குறையொன் றுடையேன் மற்றோழி நிறையில்லா மன்னுயிர்க் கேமஞ் செயல் வேண்டு மின்னே யரவழங்கு நீள்சோலை நாடனை வெற்பில் இரவரா லென்ப துரை” 1 (ஐந்-எழு-14) ‘வளை வாய்ச் சிறுகிளி’ என்னுங் (141) குறுந்தொகையும் அது. காமஞ் சிறப்பினும்-தலைவி காமஞ் சிறந்து தோன்றினும்: (உ-ம்) “ஒலியவிந் தடங்கிய யாம நள்ளெனக் கலிகெழு பாக்கந் துயின்மடிந் தன்றே தொன்றுறை கடவுள் சேர்ந்த பராரை மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத் துணைபுண ரன்றி லுயவுக்குரல் கேட்டொறுந் துஞ்சாக் கண்ண டுயரடச் சாஅய் நம்வயின் வருந்து நன்னுத லென்ப துண்டுகொல் வாழி தோழி தெண்கடல் வன்கைப் பரதவ ரிட்ட செங்கோற் கொடுமுடி யவ்வலை பரியப் போக்கிக்
மயங்கி என்னையும் நின்னையும் கேளாது கடந்து கானநாடன் வரும் நெறியில் படுகுழிவழி இருளில் மிதித்து வரும் இடம் நோக்கி அவர் தம் தளரடியினைத் தாங்கச் சென்றது. இது என்னையோ. தலைவி கூற்று. 1. கருத்து: தோழீ! நின்பால் வேண்டும் குறை ஒன்றுடையேன். ஒரு நிலையில் நில்லாத என் உயிர்க்குக் காவல் செய்ய வேண்டி நீ நாடனிடம் அரவு வழங்கும் வெற்பில் இரவில் எம் பொருட்டு வாராதே என்பதை உரைப்பாயாக. |