பக்கம் எண் :

களவியல் சூ. 21261

கடுமுர ணெறிசுறா வழங்கு
நெடுநீர்ச் சேர்ப்பன்ற னெஞ்சத் தானே1      (நற்றிணை-303)

“ஞாயிறு பட்ட வகல்வாய் வானத்
தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
யிறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
விரைகொண் டவையும் விரையுமாற் செலவே” 2      (குறுந்-92)

“கொடுந்தா ளலவ குறையா மிரப்பே
மொடுங்கா வொலிகடற் சேர்ப்ப-னெடுந்தேர்
கடந்த வழியையெங் கண்ணாரக் காண
நடந்து சிதையாதி நீ”3       (ஐந்-ஐம்-42)

“முடமுதிர் புன்னைப் படுகோட் டிருந்த
மடமுடை நாரைக் குரைத்தேன்-கடனறிந்து
பாய்திரைச் சேர்ப்பன் பரித்தேர் வரக்கண்டு
நீதகா தென்றே நிறுத்து”4


1. கருத்து: தோழீ! நெடுநீர்ச் சேர்ப்பன் தன் நெஞ்சுக் குள்ளாகவே, “ஊர் ஒலியடங்கி நடு இரவாகவும் கள்ளின் களிப்பு மிக்க பாக்கமும் துயில்கின்றது. கடற்கரைச் சேர்ப்பன் தன்நெஞ்சத்தில் “மன்றத்துப் பனை மடலிற் கட்டிய வீட்டில் இருந்து அன்றிற் பறவை துணையுடன் புணருங்கால் எழும் ஒலியைக் கேட்டுத் துயிலாத கண்ணளாய்த் துன்பம் வருத்த நம்மிடம் கொண்ட அன்பினால் வருந்துமோ நம் தலைவி” என்னும் எண்ணம் உண்டோ. தோழி வாழ்வாயாக.

2. கருத்து: ஞாயிறு மறைந்த அகன்ற விசும்பில் பறக்கும் பறவைகள் தாம் தங்குமாறு வழியயலில் உயர்ந்துள்ள கடம்ப மரத்தில் தங்கியுள்ள தம் குஞ்சுகளின் வாயில் செருகுதற்கென்று தாம் தேடிக் கொண்ட இரையை உடைமையால் விரைந்து சென்றன. நம் காதலர் அவ்வாறு இல்லறம் செய்ய முயன்றிலரே.

3. கருத்து: பக்கம் 219-ல் காண்க.

4. கருத்து: புன்னைக் கிளையில் இருந்த மடநாரைக்கு நான் உரைத்தேன். அது யாதெனின், ‘எனக்கு நீ செய்யும் கடமையாக நினைத்துச் சேர்ப்பன் தேர்வரப்