“சேணோன் மாட்டிய நறும்புகை நெகிழி வான மீனின் வயின்வயி னிமைக்கு மோங்குமலை நாடன் சாந்துபுல ரகல முள்ளி னுண்ணோய் மிகுமினிப் புல்லின் மாய்வ தெவன் கொலன்னாய்”1 (குறுந்-150) இதுவும் அது. ஏமஞ்சான்ற உவகைக் கண்ணும்-நால்வகைப் புணர்ச்சியால் நிகழுங் களவின்கண் எஞ்ஞான்றும் இடையீடுபடாமற் றலைவன் வந்து கூடுதல், இன்பத்திற்குப் பாதுகாவல் அமைந்த உவகையினைத் தலைவி எய்தியக் கண்ணும். அஃது எஞ்ஞான்றுங் கூட்டம் பெற்றமையான் மகிழ்ந்து கூறுதலாம். (உ-ம்): “நோயலைக் கலங்கிய மதனழி பொழுதிற் காமஞ் செப்ப லாண்மகற் கமையும் யானென், பெண்மை தட்ப நுண்ணிதிற் றாங்கிக் கைவல் கம்மியன் கவின்பெறக் கழாஅ மண்ணாப் பசுமுத் தேய்ப்பக் குவியிணர்ப் புன்னை யரும்பிய புலவுநீர்ச் சேர்ப்ப
உலைக்களத்து இரும்படிப்பது போலக் கரடியானது மின்மினிப் பூச்சிகள் பறக்கப் புற்றாஞ் சோற்றை யகழும்படியான அரிய மரபினையுடையது. கடந்து வரும் யாறுகள் முதலைகளை யுடையன. இவற்றால் நாம் அஞ்சுவம் என்று கருதாமல், பெண் புலிக்காக ஆண் பன்றியினைக் கொன்ற ஆண் புலியானது அதனைப் பாம்பு உமிழ்ந்த மணியொளியில் உதிரம் புலர இழுத்துச் செல்லும்படியான வருத்துதலையுடைய மலைச் சரிவில் தன் வேலே தனக்குத் துணையாக நம்மை அருளிச் சிறு வழியில் வந்த அவன் கொடியன் அல்லன். அவனை எனக்குத் தந்த நீயும் தவறுடையை இல்லை. நினக்கு இப்படியொரு துன்பத்தைக் கொடுத்த யானே தவறுடையேன். 2. கருத்து: பக்கம் 159-ல் காண்க. |