னென்ன மகன்கொ றோழி தன்வயி னார்வ முடைய ராகிய மார்பணங் குறுநரை யறியா தோனே” 1 (நற்றிணை-94) ‘மண்ணாப் பசுமுத்தேய்ப்ப நுண்ணிதிற்றாங்கிப் பெண்மை தட்ப’ வென மாறிக் கழுவாத பசியமுத்தந் தனது மிக்க ஒளியை மறைத்துக் காட்டினாற்போல் யாமும் புணர்ச்சியால் நிகழ்ந்த மிக்க நலனைப் புலப்படாமல் அரிதாகத் தாங்கிப் பெண்மையாற் றகைத்துக் கொள்ளும்படியாகத் தன் மார்பால்வருத்த முற்றாரைக் கண்டு அறியாதோனாகிய சேர்ப்பனை என்ன மகனென்று சொல்லப்படுமென மகிழ்ந்து கூறினாள். ஆர்வ முடையராக வேண்டி மார்பணங்குறுநரை அறியாதோனென்க. அலராமற் குவிந்த கொத்தையுடைய புன்னைக்கண்ணே புலால் நாற்றத்தையுடைய நீர்தெறித் தரும்பிய சேர்ப்பனென்றதனால் புன்னையிடத்துத் தோன்றிய புலானாற்றத்தைப் பூ விரிந்து கெடுக்குமாறு போல வரைந்து கொண்டு, களவின் கண் வந்த குற்றம் வழிகெட ஒழுகுவனென்பது உள்ளுறை, ‘இரண்டறிகளவின்’ (குறுந்-312) என்னும் பாட்டினுள் தோற்றப் பொலிவை மறைப்பளெனத் தலைவன் கூறியவாறும் உணர்க. மறைந்தவற் காண்டன் முதலிய ஆறற்கும் உம்மையும் உருபும் விரித்து ஏனையவற்றிற்கு உம்மை விரிக்க; உம்மை விரிக்கவேண்டுவனவற்றிற்கு உம்மையும், இரண்டும் விரிக்க வேண்டுவனவற்றிற்கு இரண்டும் விரித்து, அவற்றிற்கும் ஏனை வினையெச்சங்கட்கும் கூற்று நிகழ்தலுளவென முடிக்க. கூற்று அதிகாரத்தான் வரும். உயிராக் காலத்து உயிர்த்தலு முளவென முடிக்க.
1. கருத்து: தோழீ! காம நோய் அலைக்கழிக்க அதனால் கலக்கமுற்று வருந்தியபோது அருகு வந்து இனியமொழி கூறி ஆற்றுவித்தல் ஆண் மகனுக்குரிய செயல். அவ்வாறு வந்து ஆற்றுவிக்காமல் யானே என் காமப் புணர்ச்சியால் ஏற்பட்ட மேனியழகைக் கம்மியன் கழுவாத முத்து தன் ஒளியை மறைத்திருப்பது போல மறைக்கும்படியாகத் தன் மார்பால் துன்புறும் என்னை அறியாத நம் தலைவன் என்ன மகன் என்று கூறப்படுவான். |