பக்கம் எண் :

களவியல் சூ. 21265

ஓரிடத்தான தன்வயின் உரிமையும், அவன் வயிற் பரத்தையும் உள-இக்கூற்று முப்பத்தாறனுள் ஒரோவிடங்களிலே தன்னிடத்து அன்பிற்கு உரிமையுண்டாகவும் அவனிடத்து அயன்மை உண்டாகவும் கூற்று நிகழ்தலுள:

ஆன்-ஆனவென ஈறுதிரிந்தது.

அன்னவும் உள-அவை போல்வன பிறவும் உள என்றவாறு.

‘அன்னபிற’ என்றதனான் இன்னுந் தலைவி கூற்றாய் இவற்றின் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க.

“பிணிநிறந் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க
வணிமலை நாடன் வருவான்கொ றோழி
கணிநிற வேங்கை கமழ்ந்துவண் டார்க்கு
மணிநிற மாலைப் பொழுது”1      (திணை-ஐம்-9)

இது தலைவி இரவுக்குறி நயந்து கூறியது.

“பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலரே
நீர்பரந் தொழுகலி னிலங்கா ணலரே
யெல்லை சேறலி னிருள்பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்
யாங்குவந் தனையோ வோங்கல் வெற்ப
வேங்கை கமழுமெஞ் சிறுகுடி
யாங்கறிந் தனையோ நோகோ யானே” 2      (குறுந்-355)

இஃது இரவுக் குறிவந்த தலைவனை நோக்கிக் கூறியது.

“கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி
யஞ்ச லோம்பி யார்பதங் கொண்டு
நின்குறை முடித்த பின்றை யென்குறை
சொல்லல் வேண்டுமாற் கைதொழு திரப்பல்
பல்கோட் பலவின் சார லவர்நாட்டு
நின்கிளை மருங்கிற் சேறி யாயின்
அம்மலை கிழவோற் குரைமதி யிம்மலைக்


1. கருத்து: பக்கம் 198-ல் காண்க.

2. கருத்து: பக்கம் 202-ல் காண்க.