கானக் குறவர் மடமகள் ஏனல் காவ லாயின ளெனவே” 1 (நற்றிணை-102) எனவும், “ஓங்க லிறுவரைமேற் காந்தள் கடிகவினப் பாம்பென வோடி யுருமிடித்துக் கண்டிரங்கும் பூங்குன்ற நாடன் புணர்ந்தவந் நாட்போலா வீங்கு நெகிழ்ந்த வளை”2 (திணை-ஐம்-3) எனவும், “மன்றப் பலவின் சுளைவிளை தீம்பழ முண்டுவந்து மந்தி முலைவருடக்-கன்றமர்ந் தாமா சுரக்கு மணிமலை நாடனை யாமாப் பிரிவ திலம்”3 (ஐந்-எழு-4) எனவும் வரும். “அவருடை நாட்ட வாயினு மவர்போற் பிரித றேற்றாப் பேரன் பினவே யுவக்கா ணென்று முள்ளுவ போலச் செந்தார்ச் சிறுபெடை தழீஇப் பைங்குர லேனற் படர்தருங் கிளியே” 4 இது பகற் குறிக்கண் தலைவனீட ஆற்றாது தோழிக்குக் கூறியது.
1. கருத்து: தினைக்கதிரைக் கொய்த பைங்கிளியே! தினைக்கதிரைக் கொய்தமையால் அஞ்சாதே. நீ நிறைய அதனை உண்டு உன் பசிக்குறையைத் தீர்த்துக் கொண்ட பின் என் குறையை முடிப்பாயாக. நின்னைக் கைதொழுது வேண்டுகிறேன். பலா மரங்களையுடைய மலைச்சாரல் நாட்டவர் ஊரில் உள்ள நின் சுற்றத்தாரிடைச் செல்வாயாயின் அம்மலை கிழவோனிடம் கானக் குறவர் மடமகள் தினைப்புனங்காவல் செய்பவளானாள் என்பதை உரைப்பாயாக. 2. கருத்து: பக்கம் 219-ல் காண்க 3. கருத்து: பக்கம் 219-ல் காண்க. 4. கருத்து: தோழீ! சிறு பெடையைத் தழுவித் தினைப்புனம் படரும் கிளிகளை இதோ பார். அவை தலைவனுடைய நாட்டில் இருப்பன வாயினும் அவர்போல ஒன்றையொன்று பிரிதலைத் தெளிய மாட்டா. |