பக்கம் எண் :

களவியல் சூ. 22267

தலைவிக்குக் கூற்று நிகழுமிடம் சில.

110. வரைவுஇடை வைத்த காலத்து வருந்தினும்
 வரையா நாளிடை வந்தோன் முட்டினும்
உரைஎனத் தோழிக்கு உரைத்தற் கண்ணும்
தானே கூறும் காலமும் உளவே      (22)

ஆ. மொ.

இல.

There are occasions when the lady-love herself may make expressions at the time of his separation having the marriage postponed, at his unexpected arrival and meeting with her family members and at requesting her ‘tholi’ for divulging the secret to the parents and her sufferings to her lover.

இளம்.

இதுவும் தலைவி மாட்டுச் சொல் நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) : தலைவன் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கு கின்றான், இன்னநாள் வரைந்து கொள்வல் எனக் கூறித் தோழியிற் கூட்டத்திற்கு முயலாது தணந்தவழி யதனைத் தோழி ஐயப்படுங் குறிப்புத் தோன்றாமை மறைத்தொழுகிய தலைவி, அவன் வருந்துணையும் ஆற்றாது வருத்தமுறினும் வரையாத நாளின்கண் மறைந்தொழுகாநின்ற தலைவன் செவிலி முதலாயினாரை முட்டினவழியும், இவ்வொழுக்கத்தினை நின் தோழிக்கு உரையெனத் தலைவன் கூறிய வழியும் தலைவி தானே கூறுங் காலமும் உள என்றவாறு.

உம்மை எதிர்மறை யாதலாற் கூறாமை பெரும்பான்மை. காலமும் என்றது இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாங் காலம். அக்காலத்துத் தோழி மதியுடம்படாமல் அறிவிக்கும் என்றவாறு.

இனி வரைவிடை வைத்த காலத்து வருத்தமுற்ற வழிக்கூறிய செய்யுள்:-

“புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்
கடியுண் கடவுட் கிட்ட சில்குரல்