பக்கம் எண் :

268தொல்காப்பியம்-உரைவளம்

அறியா துண்டனம் மஞ்ஞை யாடுமகள்
வெறியுறு வனப்பின் வேர்த்துற்று நடுங்குஞ்
சூர்மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே” 1      (குறுந்-105)

எனவரும்.

வரையா நாளிடை வந்தோன் முட்டியவழித் தலைவி கூறிய தற்குச் செய்யுள்:-

“தாழை குருகீனுந் தண்ணந் துறைவனை
மாழைமான் நோக்கின் மடமொழி-நூழை
நுழையு மடமகன் யார்கொலென் றன்னை
புழையும் அடைத்தாள் கதவு”2      (கைந்நிலை-59)

எனவும்,

“அறியா மையின் அன்னை அஞ்சிக்
குழையன் கோதையன் குறும்பைந் தொடியன்
விழவயர் துணங்கை தழுவுகஞ் செல்ல
நெடுநிமிர் தெருவிற் கைபுகு கொடுமிடை
நொதும லாளன் கதுமெனத் தாக்கலின்
கேட்பார் உளர்கொல் இல்லைகொல் போற்றென
யாணது பசலை என்றனன் அதனெதிர்
நாணிலை எலுவ என்றுவந் திசினே
செறுநரும் விழையுஞ் செம்ம லோனென


1. கருத்து: சூர்மலை நாடன் நம்மொடு கொண்ட நட்பு பொய்த்ததனால் நீர் மலிந்த கண்களொடு நினைத்தல் மாத்திரையே அமைந்தது.

2. கருத்து: மடமொழியே! குருகுபோல் மலர்தரும் தாழை வளர்ந்த துறைவனைப் பார்த்து அன்னையானவள் புறக்கடை வாயில் வழியாக வந்துபோம் அறிவிலியாவன் என்று கூறி, கதவின் துளையையும் நாம் பாராதபடி அடைத்தாள். இனி நாம் என் செய்வேம்.