நறுநுதல் அரிவை போற்றேன் சிறுமை பெருமையிற் காணாது துணிந்தே” 1 (நற்றிணை-50) எனவும் வரும். இதன்கண் என்றானென ஒருசொல் வருவிக்க. உரையெனத் தோழிக்கு உரைத்தற்குச் செய்யுள்:- “பொன்இணர் வேங்கை கவினிய பூம்பொழிலுள் நன்மலை நாடன் நலம்புனைய-மென்முலையாய் போயின திந்நாள் புனத்து மறையினால் ஏயினார் இன்றி இனிது.”2 (ஐந்திணையைம்-11) எனவரும். இன்னும், “உரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணும்” என்பதற்குத் தலைவற்கு உரையெனத் தோழிக்கு உரைத்தற்கண்ணும் என்றுமாம். உதாரணம்: “என்னைகொல் தோழி அவர்கண்ணும் நன்கில்லை அன்னை முகனும் அதுவாகும்-பொன்னலர்
1. கருத்து: அன்னையே (தலைவியே)! என் அறியாமையாலே நினக்கு அஞ்சி, நம் தலைவன் குழையணிந்து மாலைசூடி தொடியணிந்து மகளிர் கோலத்துடன் துணங்கைக் கூத்தாடும் இடத்தில் வளைத்துக் கொள்ளலாம் என்று நான் செல்ல, அவன் நெடிய தெரு முடிந்து வேறுமோர் தெரு கூடுமிடத்தில் யாரோபோல வந்து எதிர்ப்பட்டானாக, அவனைப் பார்த்து இப்படிப்பட்ட உன்னைக் கேட்பார் உளரோ இல்லையோ என்றேன். அதற்கு அவன் தன்னை ஒரு பெண்ணாகக் கொள்ளும் படி என்னைப் பற்றிய பசலை மிக அழகியது என்றான். அதற்கு எதிராக, பகைவரும் விரும்பும் அழகிய தலை மையுடைய தலைவனே இவன் என்று வணங்காமல் என் சிறிய குணம் பெரியதானமையினால் ஆராயாமலே துணிச்சல் கொண்டு ஏய்! நீ நாணம் உடையை அல்லை என்று கூறி வந்து விட்டேன். 2. கருத்து: வேங்கைப் பூங்கொத்து அழகு செய்யும் பொழிலில் நன்மலை நாடன் நம் நலனைப் புனைந்துரைக்க இந்நாள் இனியதாகப் போயினது எப்படி எனின் அப்புணர்ச்சிக்கு இடையூறாக வந்தவர் இல்லாமல். |