பக்கம் எண் :

களவியல் சூ. 227

ஆயத்தின் நீங்கித் தனித்து ஓரிடத்து எளிதிற் காண்டல் அரிதென்றற்குப் “பாலதாணையிற் காண்ப” என்றார். எனவே, வேற்று நிலத்திற்காயின் வேட்டை மேலிட்டுத் திரிவான் அங்ஙனந் தனித்துக் காணுங் காட்சி அருமையாற் பாலதாணை வேண்டுமாயிற்று.

(உ-ம்)

“இவனிவளைம்பால் பற்றவு மிவளிவன்
புன்றலை யோரி வாங்குநள் பரியவுங்
காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா
தேதில சிறு செருவுறுப மன்னோ
நல்லை மன்றம்ம பாலே மெல்லியற்
றுணை மலர்ப் பிணையலன்ன விவர்
மணமகிழியற்கை காட்டியோயே1      (குறுந்-229)

இஃது ஒரூரென்றதாம்.

“காமஞ்செப்பாது கண்டது மொழிமோ”      (குறுந்-2)

என்றது, என் நிலத்து வண்டாதலின் எனக்காகக் கூறாதே சொல் என்றலிற் குறிஞ்சி நிலம் ஒன்றாயிற்று.

“இலங்கு மருவித்திலங்கு மருவித்தே
வாளி னிலங்கு மருவித்தே தானுற்ற
சூள்பேணான் பொய்த்தான் மலை”. 2      (கலி-41)


1. கருத்து. ஏ ஊழ் வினையே! இவன் இவனின் கூந்தலைப் பற்றவும் இவள் இவனின் புல்லிய தலையில் மயிரை வளைத்துப் பற்றவும் ஆகப் பிணங்கிய போது காதற் செவிலியர் தடுக்கவும் அயலவர் போலச் சிறிய சண்டை செய்வர். முன்னாளில் அதுகழிந்தது. இரண்டான மலரால் கட்டிய மாலை போலும் இவ்விருவர்க்கும் மணந்து மகிழும்படியாக இக்காலத்துக் காட்டினாய். நீ வாழ்க.

2. கருத்து: தான் சொன்ன சூளுறவைக் கைவிட்டுப் பொய்த்தவன் மலையாய் இருந்தும் இலங்கும் அருவி யினையுடையதாய் இருந்ததே-இதில் பொய்த்தவன் மலை என்றதால் தலைவன் மலை வேறு என்பதும் தலைவி மலை வேறு என்பதும் புலனாம்.