(உ-ம்): “அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை மேக்கெழும் பெருஞ்சினை யிருந்த தோகை பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன் றகாஅன் போலத் தான்றீது மொழியினுந் தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே முத்துநிரை யொத்த முள்ளெயிற்றுத் துவர்வாய் வரையாடு வன்பறழ்த் தந்தைக் கடுவனு மறியுமக் கொடியோ னையே” 1 (குறுந்-26) “யாரு மில்லைத் தானே கள்வன் றானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தா ளன்ன சிறுபசுங் கால வொழுகுநீ ராரல் பார்க்குங் குருகு முண்டுதா மணந்த ஞான்றே” 2 (குறுந்-25) இவற்றுள் துறந்தான் போலவும் மறந்தான் போலவுங் கருதித் ‘தான் தீது மொழியினும்’ எனவும், ‘யானெவன் செய்கோ’ எனவுந் தோழி வினவாக்காலத்து அவன் தவற்றை வரைவிடை வைத்தலின் ஆற்றாமைக்கு அறிவித்தாள். “பகலெரி சுடரின் மேனி சாயவும் பாம்பூர் மதியி னுதலொளி கரப்பவு மெனக்குநீ யுரையா யாயி னினக்கியான் உயிர்பகுத் தன்ன மாண்பினே னாகலி நீகண் டிசினால் யானே யென்றுநனி யமுங்க லான்றிசி னாயிழை யொலிகுர
1. கருத்து: நாடனாகிய தலைவன் தான் சொன்ன சொல்லைக் காவாமல் பிரிந்து தகான் ஆயினான் எனக்கொண்டவள் போலத் தான் (தலைவி) உயிர் நீப்பதாகத் தீயமொழியை மொழியினும் அக்கொடிய தலைவன் ஒழுக்கத்தை ஆண் குரங்கும் அறியும்; அது தன் கண்ணாற் கண்டதைப் பொய்யாது. 2. கருத்து: பக்கம் 211-ல் காண்க. |