“அது கொறோழி காம நோயே வதிகுரு குறங்கு மின்னிழற் புன்னை யுடைதிரைத் துவலை யரும்புந் தூநீர் மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் பல்லித ழுண்கண் பாடொல் லாவே” 1 (குறுந்-5) என்னும் பாட்டும் அது. “தோழி வாழி மேனாட் சாரற் கொடியோர் குன்றம் பனிப்ப நெடிதுநின்று புயறொடங் கின்றே பொய்யா வானக் கனைவர லழிதுளி தலைஇ வெம்முலை யாகம் நனைக்குமெங் கண்ணே” 2 இது வரைவிடைப் பருவங் கண்டு ஆற்றாது தோழிக்குக் கூறியது. “பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக் கிளிவா யொப்பி னொளிவிடு பன்மலர் வெருகுப்பல்லுருவின முல்லையொடு கஞலி வாடை வந்ததன் றலையு நோய்பொரக் கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக் கடலாழ் கலத்திற் றோன்றி மாலை மறையுமவர் மணிநெடுங் குன்றே” 3 (குறுந்-240) இது பருவங் கண்டு ஆற்றாது தோழிக்குக் கூறியது.
1. கருத்து: தோழீ! மெல்லம் புலம்பன் நம்மைப் பிரிந்தானாக என் கண்கள் துயில் பெறாவாயின. அதுதான் காம நோயோ. 2. கருத்து: தோழீ! முன்நாளில் குன்றம் குளிர மழை பெய்யத் தொடங்கியது பொய்யாத மேகம். அதனால் என் கண்கள் மிக்க துளிகளைக் கொண்டு முலைமார்பை நனைக்கும். 3. கருத்து: அவரை மலர்கள் முல்லையொடு கலக்கும்படி வாடைக் காற்று வீசும் அதற்கு மேலும் யான் கண்டு ஆற்றியிருத்தற்கமைந்த தலைவன் மலையும் மாலையில் தொ-18 |