“நோயுங் கைம்மிகப் பெரிதே மெய்யுந் தீயுமிழ் தெறலின் வெய்தா கின்றே ஒய்யெனச் சிறிதாங் குயிரிய பையென முன்றிற் கொளினே நந்துவள் பெரிதென நிரையே நெஞ்சத் தன்னைக் குய்த்தாண் டுரையினி வாழி தோழி புரையி னுண்ணே ரெல்வளை நெகிழ்த்தோன் குன்றத் தண்ண னெடுவரை யாடித் தண்ணென வியலுறை முள்கிய வளியென் பசலை யாகந் தீண்டிய சிறிதே”1 (நற்றிணை-236) இது வரைவிடை ஆற்றாமை மிக்குழி அவன் வரையின் முள்கிய காற்று என் மெய்க்கட்படினும் ஆற்றலாமென்றது. “அம்ம வாழி தோழி யவர்போ னம்முடை வாழ்க்கை மறந்தன்று கொல்லோ மனையெறி யுலக்கையிற் றினைகிளி கடியுங் கான நாடன் பிரிந்தெனத் தானும் பிரிந்தன்றென் மாமைக் கவினே” 2 இது வன்புறை யெதிரழிந்தது. சிறுபுன் மாலை சிறுபுன் மாலை தீப்பனிப் பன்ன தண்வளி யசைஇச்
கடலில் மூழ்கும் கலம்போல இருளில் மறையும். அதனால் பிரிவை ஆற்றதில்லேன். 1. கருத்து: தோழீ! எனக்கு நோய் மிக்கது; உடம்பும் வெப்பம் உடையதாயிற்று. இனி உய்யேன். ஒரு கால் அவனது மலையிற்பட்ட காற்று என் மெய்யைத் தீண்டினால் உய்வேன். ஆதலின் அது படும்படியாக அன்னையிடம் சென்று என்னை முற்றத்திலே கிடத்தினால் உய்வேன்’ என்று சொல்வாயாக. 2. கருத்து: வீட்டில் குத்தும் உலக்கை ஓசையால் புனத்துக் கிளியைக் கடியும்படியான கான நாடன் நம்மைப் பிரியவே என் மாமையழகு தானும் என்னைவிட்டுப் பிரிந்தது. நம்முடன் உடனுறை வாழ்க்கையை மறந்து விட்டதோ அக்கவின். |