பக்கம் எண் :

களவியல் சூ. 22275

செக்கர் கொண்ட சிறுபுன் மாலை
வைகலும் வருதியா லெமக்கே
யொன்றுஞ் சொல்லாயவர் குன்றுகெழு நாட்டே” 1

இது மாலைப் பொழுது கண்டு வருந்திக் கூறியது.

இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக.

“கேட்டிசின் வாழி தோழி யல்கற்
பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇ
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்
தமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற வளியேன் யானே” 2      (குறுந்-30)

இது வரைதற்குப் பிரிய வருந்துகின்றது என்னென்றாட்குக் கனவு நலிவுரைத்தது.

“ஆடமை குயின்ற வவிர்துளை மருங்கிற்
கோடை யவ்வளி குழலிசை யாகப்
பாடின் னருவிப் பனிநீ ரின்னிசை
தோடமை முழவின் றுதைகுர லாகக்
கணக்கலை யிகுக்குங் கடுங்குரற் றூம்பொடு
மலைப்பூஞ் சாரல் வண்டியா ழாக
வின்பல் லிமிழிசை கேட்டுக் கலிசிறந்து
மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
கழைவள ரடுக்கத் தியலியா டுமயில்


1. கருத்து: தீத்தெளிப்பதுபோல் உள்ள காற்றுடன் அசைந்து சிவந்த நிறங் கொண்டுவரும் சிறிய புல்லிய மாலைக் காலமே! தினமும் எம்மை வருத்த வருகிறாய். ஆனால் அவரது குன்ற நாட்டிற் சென்று அவரிடம் ஒன்றும் சொல்லவில்லையே!

2. கருத்து: தோழீ! கேட்பாயாக. நேற்றையிரவில் பொய்வல்ல தலைவன் நனவுபோலக் கனவில் மெய்யுறப் பொருந்தி மருட்ட விழித்துப் படுக்கையைத் தடவினேன். யான் மிக இரங்கத் தக்கவள்.