விழவுக்கள விறலியிற் றோன்று நாட னுருவ வல்விற் பற்றி யம்புதெரிந்து செருச்செய் யானை சென்னெறி வினாஅய்ப் புலர்குர லேனற் புழையுடை யொருசிறை மலர்தார் மார்ப னின்றோற் கண்டோர் பலர்தில் வாழி தோழி யவரு ளாரிருட் கங்கு லணையொடு பொருந்தி யோரியா னாகுவ தெவன்கொ னீர்வார் கண்ணொடு ஞெகிழ்தோ ளேனே”1 (அகம்-82) அவனை ஆயத்தார் பலருங் கண்டாரென வந்தோன் முட்டிய வாறும் அவருள் நெகிழ்தோளேன் யானேயெனத் தானே கூறியவாறுங் காண்க. “தாழை குருகீனுந் தண்ணந் துறைவனை மாழைமா னோக்கின் மடமொழி-நூழை நுழையு மடமகன் யார் கொலென் றன்னை புழையு மடைத்தாள் கதவு”2 (கைந்நிலை-59) “நகைநீ கேளாய் தோழி யல்கல் வயநா யெறிந்து வன்புறழ் தழீஇ
1. கருத்து: தோழீ! மூங்கில் துளைவழி வரும் ஒலி குழலிசையாக அருவியோசை முழவின் ஒலியாக மான் குரல் பெருவங்கிய ஒலியாக வண்டொலி யாழிசையாக குரங்குகள் காண்போராகப் பக்கமலையிடத்தில் உலவி யாடும் மயில்கள் நடன மாதராகத் தோன்றும் நாடன் ஒருவன், தன்னால் எய்யப்பட்ட அம்பு பாய்ந்த யானையை இவ்வழி வந்ததோ என வினவி நின்றான். அவனைக் கண்டோர் பலர்; அவருள் ஓர்யான் மட்டும் படுக்கையிற் கிடந்து நீர்வார் கண்ணொடு நெகிழும் தோளுடையேனாய் ஆகுவது என்னை? 2. கருத்து: பொன்னிற மான்போலும் கண்ணும் மென் மொழியும் உடைய தோழீ! தாழை வெண் சங்குபோல் பூவீனும் தண்ணந்துறைவனைக் கண்டு நூழை வழி நுழையும் இளைஞன் யார் என்று சொல்லிக் கொண்டே நாம் பார்த்துவிடாதபடிக் கதவின் சாவித் துளையை அடைத்தாள் நம் தாய். |