பக்கம் எண் :

களவியல் சூ. 22277

யிளைய ரெய்துதன் மடக்கிளை யோடு
நான்முலைப் பிணவல் சொலிய கானொழிந்
தரும்புழை முடுக்க ராட்குறித்து நின்ற
தறுகட் பன்றி நோக்கிக் கானவன்
குறுகினன் றொடுத்த கூர்வாய்ப் பகழி
மடைசெலன் முன்பிற்றன் படைசெலச் செல்லா
தருவழி விலக்குமெம் பெருவிறல் போன்மென
வெய்யாது பெயருங் குன்ற நாடன்
செறியரி னுடக்கலிற் பரீஇப் புரியவிழ்ந்
தேந்துகுவவு மொய்ம்பிற் பூச்சோர் மாலை
யேற்றிமிற் கயிற்றி னெழில்வந்து துயல்வர
வில்வந்து நின்றோற் கண்டன ளன்னை
வல்லே யென்முக நோக்கி
நல்லை மன்னென நகூஉப்பெயர்ந் தோளே”      (அகம்-248)

இவை வந்தோன் செவிலியை எதிர்த்துழிக் கூறியன.

“கொடியவுங் கோட்டவு நீரின்றி நிறம்பெறப்
பொடியழற் புறந்தந்த பூவாப்பூம் பொலங்கோதைத்
தொடிசெறி யாப்பமை யரிமுன்கை யணைத்தோளா
யடியுறை யருளாமை யொத்ததோ நினக்கென்ன
நரந்தநா றிருங்கூந்த லெஞ்சாது நனிபற்றிப்
பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை
நலம்பெறச் சுற்றிய குரலமை யொருகாழ்
விரன்முறை சுற்றி மோக்கலு மோந்தன
னறாஅவவிழ்ந் தன்னவென் மெல்விரற் போதுகொண்டு
செறாஅச் செங்கண் புதைய வைத்துப்
பறாஅக் குருகி னுயிர்த்தலு முயிர்த்தனன்
றொய்யி லிளமுலை யினிய தைவந்து