பக்கம் எண் :

களவியல் சூ. 22279

கருங்கால் வெண்குருகு பயிறரும்
பெருங்கடற் படைப்பையெஞ் சிறுநல் லூரே”1

இஃது அன்றில் பிரியின் வாழாதெனக் கூறென்றது.

“ஐயோ வெனயாம் பையெனக் கூறிற்
கேட்குவர் கொல்லோ தாமே மாக்கடற்
பரூஉத்திரை தொகுத்த நுண்கண் வெண்மண
லின்னுந் தூரா காணவர்
பொன்னி னெடுந்தேர் போகிய நெறியே” 2

இஃது அவர் இன்னும் போவதற்கு முன்னே நம் வருத்தத்தை வெளிப்படக் கூறென்றது.

“என்னைகொ றோழி யவர்கண்ணு நன்கில்லை
யன்னை முகனு மதுவாகும்-பொன்னலர்
புன்னையம் பூங்கானற் சேர்ப்பனைத் தக்கதோ
நின்னல்ல தில்லென் றுரை” 3      (ஐந்-எழு-58)

இது தலைவற்குக் கூறென்றது.

இவை தலைவி அறத்தொடு நிற்றற் பகுதி, தோழிக்கே உரைத்தற்குத் தோழிக்கென்றார்.


1. கருத்து: கடற்றுறையில் மேயும் வலம்புரிச் சங்கு தன் துணையைத் தேடிச் சென்று கரிய காலுடைய வெண் சங்கினை (துணையை) அடைந்து புகும் கடற்பக்கத்தையுடைய எம் சிறிய நல்லூரில் நெருப்புக் கொழுந்து விட்டெரிவது போலும் கொண்டையை யுடைய அன்றில் தன் துணையைப் பிரியின் வாழாது என்பதைத் தலைவனிடம் கூறுவாயாக-தோழியிடம் கூறியது.

2. கருத்து: இக் கடற்கரைப் பக்கத்தில் அவர் தேர் சென்ற வழியைக் கடலலைகள் தொகுத்த மணல் இன்னும் தூர்க்கவில்லை. அதனால் அவர் அண்மையில்தான் சென்று கொண்டிருப்பார். நாம் நம் துன்பத்தை மெதுவாகக் கூறினும் அவர் கேட்பார் போலும்.

3. கருத்து: பக்கம் 270-ல் காண்க.