111. | உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் | | செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு காமக் கிழவன் உள்வழிப் படினும் தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும் ஆங்கவை பிறவும் தோன்றுமன் பொருளே (23) |
ஆ. மொ. இல. When the lady-love goes to her lover on her own accord having the Sayings of the ancients in mind that the modesty is more essential than life. and chastity is more essential than modesty and when she expresses the words which betray her mental weakness, there will be found love themes. இளம். இதுவும் அது. (இ-ள்) : ‘உயிரினும் நான் சிறந்தது. அதனினும் குற்றந் தீர்ந்த காட்சியினையுடைய கற்புச் சிறந்தது’ என முன்னோர் கூற்றை யுட்கொண்டு தலைவனுள்ள விடத்துச் செல்லலும் வருத்தமில்லாச் சொல்லைத் தலைவி சொல்லுதலுமாகிய அவ்வகை பிறவுந் தோன்றும் அவை பொருளாம் என்றவாறு. மன் ஆக்கத்தின் கண் வந்தது. எனவே இவ்வாறு செய்தல் பொருளல்ல என்று கூறற்க என்றவாறு. இதனுள் நாணத்தினும் கற்புச் சிறந்த தென்றவாறு. நொதுமலர் வரைவு நோக்கிக் கூறுவது: “அறிதோ தானே நாணே நம்மொடு நனிநீடு உழந்தன்று மன்னே இனிய வான்பூங் கரும்பில் ஓங்குமணற் சிறுசிறை தீம்புனல் நெரிதர வீழ்ந்துக் காஅங்குத் |