தாங்கும் அளவைத் தாங்கிக் காம நெரிதரக் கைந்நில் லாதே”1 (குறுந்-149) “கோடீ ரிலங்குவளை நெகிழ நாடொறும் பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே எழுஇனி வாழியென் நெஞ்சே முனாஅது குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட்டு உம்பர் மொழிபெயர் தேஎத்தா ராயினும் வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே” 2 (குறுந்-11) இது காமக் கிழவனுள் வழிப்படுதல். தாவில் நன்மொழி கூறியதற்குச் செய்யுள்: “மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதுங் கொடியர் அல்லர்எம் குன்றுகெழு நாடர் பசைஇய பசந்தன்று நுதலே ஞெகிழிய ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே3 (குறுந்-87) எனவரும்.
1. கருத்து: தோழீ! நாணம் என்பது மிக இரங்கத்தக்கது. அது நம்மொடு நீண்ட காலம் இருந்து துன்புற்றது. இப்போது கரும்புப் பாத்தியில் உள்ள மணல் சிறுகரை தண்ணீர் நெரிக்கக் கரைந்ததுபோல அந் நாணம் காமம்மிக்கு நெரிக்க நம்மிடம் நில்லாது மறைந்தது. 2. கருத்து: நெஞ்சமே! நாடொறும் வளைகழலத் துயிலாத கண்ணொடு தனிமையில் இவ்வூரில் உறைதலினின்றும் தப்புவோம். நீயும் என்னுடன் எழுக. வடுகரது பகைப் புலமாகியதும் கட்டி என்பானதுமாகிய நல்ல நாட்டுக்கு அப்பாலுள்ள மொழிபெயர்த்தேயத் (வேறுதேயத்)தில் இருப்பவராயினும் நம் தலைவருடை நாட்டைச் சென்று சேர முடிவு கொண்டு விட்டேன். 3. கருத்து: பக்கம் 199-ல் காண்க. |