பக்கம் எண் :

களவியல் சூ. 23283

யாண்டுங் காணேனென அவனை வழிபட்டுக் கூறினமையிற் கற்பின்பாலதாய்த் தோழியுந் தலைவனும் பெண்டன்மையிற் றிரியக் கருதாது நன்கு மதித்தவாறு காண்க.

“அருங்கடி யன்னை காவ னீவிப்
பெருங்கடை யிறந்து மன்றம் போகிப்
பகலே பலருங் காண நாண்விட்
டகல்வயற் படப்பை யவனூர் வினவிச்
சென்மோ வாழி தோழி பன்னாட்
கருவி வானம் பெய்யா தாயினு
மருவி யார்க்கும் கழைபயின னந்தலை
வான்றோய் மாமலை நாடனைச்
சான்றோ யல்லை யென்றனம் வரற்கே” 1      (நற்றிணை-365)

“கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாடொறும்
பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி
யீங்கிவ ணுறைதலு முய்குவ மாங்கே
யெழுகினி வாழியெ னெஞ்சே முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழி பெயர்தே எத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசி னவருடை நட்பே” 2      (குறுந்-11)

இவை தோழிக்கும் நெஞ்சிற்கும் கூறியன.

“ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த
குரும்பி வல்சிப் பெருங்கை யேற்றை


1. கருத்து: தோழீ! மழை பெய்யாதாயினும் அருவி ஆர்க்கும் மலை நாடனைப் பார்த்து நீ எம்மைக் கை விடுதலின் சான்றோய் அல்லை என்று கூறி வருவதற்காகத் தாயின் காவலையும் நீங்கி பெரிய வாயிற் கடையையும் கடந்து ஊர்ப் பொது மன்றத்தையடைந்து பகற்போதிலேயே பலரும் காண வாய்விட்டு அவன் ஊர் யாதென வினவுவதற்குச் செல்வேமோ வாழி.

2. கருத்து: பக்கம் 281ல் காண்க.