பக்கம் எண் :

284தொல்காப்பியம்-உரைவளம்

தூங்குதோற் றுதிய வள்ளுகிர் கதுவலிற்
பாம்புமத னழியும் பானாட் கங்குலு
மரிய வல்லம னிகுளை பெரிய
கேழ லட்ட பேழ்வா யேற்றை
பலாவம லடுக்கம் புலர வீர்க்குங்
கழைநரல் சிலம்பி னாங்கண் வழையொடு
வாழை யோங்கிய தாழ்கண் ணசும்பிற்
படுகடுங் களிற்றின் வருத்தஞ் சொலியப்
பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல்
விண்டோய் விடரகத் தியம்பு மவர்நாட்
டெண்ணரும் பிறங்கன் மானதர் மயங்காது
மின்னுவிடச் சிறிய வொதுங்கி மென்மெலத்
துளிதலைத் தலைஇய மணியே ரைம்பால்
சிறுபுறம் புதைய வாரிக் குரல்பிழியூஉ
நெறிகெட விலங்கிய நீயிரிச்சுர
மறிதலு மறிதிரோ வென்னுநர்ப் பெறினே” 1      (அகம்-8)

என்னும் அகப்பாட்டும் அது.

இங்ஙனம் வந்துழியுங் கற்புச் சிறந்ததாம்.


1. கருத்து: தோழீ! ஈசல் வழங்கும் புற்றிலே குரும்பியாகிய உணவை அகழ்ந்தெடுத்த கரடியின் கூரிய கால் நகங்கள் படுதலால் பாம்பு வலியழியும்படியான பாதி யிரவும் அவர்க்கு வருதற்கு அரிய அல்ல. எப்போதென்றால் கூறுவேன். பன்றியைக் கொன்ற புலி அதனைப் பலாமர மலையடுக்கத்தில் ஈர்த்துச் செல்லும் படியான மலையில் சுரபுன்னையொடு வாழையும் மலிந்த படுகுழியில் களிறு வீழ்ந்ததாக அதன் வருத்தம் போக்கி எழச் செய்ய அருகேயுள்ள மரத்தை ஒடிக்கும் ஓசையானது விடர்களில் ஒலிக்கும்படியான அவர் நாட்டிலே, அளவில்லா மலையடுக்கத்தில் வழி மயங்காமல் மின்னல் ஒளியில் சிறிது சிறிதா ஒதுங்கி வந்து மழையில் நனைந்த முதுகில் பரந்த தன் கூந்தலின் நுனியைப் பிழிந்து வழி தவறி வந்த நீயீர் வரும் சுரவழியருமையை யறியவும் அறிதிரோவேனக் கேட்பவர் இருந்தால் அப்போது.