இனிப் பிறனாற் கொள்வன வருமாறு. “பொன்னிணர் வேங்கை கவினிய பூம்பொழிலு ணன்மலை நாட னலம்புனைய-மென்முலையாய் போயின சின்னாள் புனத்து மறையினா லேயினா ரின்றி யினிது”1 (ஐந்-ஐம்-11) “கானலஞ் சிறுகுடிக் கடன்மேம் பரதவர் நீனிறப் புன்னைக் கொழுநிழ லசைஇத் தண்பெரும் பரப்பி னொண்பத நோக்கி யங்க ணரில்வலை யுணக்குந் துறைவனொ டலரே, யன்னை யறியி னிவணுறை வாழ்க்கை அரிய வாகு நமக்கெனக் கூறிற் கொண்டுஞ் செல்வர்கொ றோழி யுமணர் வெண்க லுப்பின் கொள்ளை சாற்றிக் கணநிரை கிளர்க்கு நெடுநெறிச் சகடம் மணன்மடுத் துரறு மோசை கழனிக் கருங்கால் வெண்குருகு வெரூஉ மிருங்கழிச் சேர்ப்பிற்றம் மிறைவ னூர்க்கே” 2 (நற்றினை-4) எனவரும். “விழுந்தண் மாரிப் பெருந்தண் சாரற் கூதிர்க் கூதளத் தலரி நாறு மாதர் வண்டி னயவருந் தீங்குரன் மணநாறு சிலம்பி னசுண மோர்க்கு முயர்வரை நாடற் குரைத்த லொன்றோ துயர்மருங் கறியா வன்னைக் கிந்நோய் தணியுமா றிதுவென வுரைத்த லொன்றோ செய்யா யாகலிற் கொடியை தோழி மணிகெழு நெடுவரை யணிபெற நிவந்த
1. கருத்து: பக்கம் 269-ல் காண்க. 2. கருத்து: தோழீ! துறைவனிடம் ஊரலர் பற்றித் தாய் அறியின் புலால் உணக்க இங்கு உறையும் வாழ்க்கை நமக்கு அரிதாகும். (இற் செறிப்பாள் தாய்) என்று கூறினால், தம் ஊர்க்கு நம்மைக் கொண்டு சேர்வரோ? |