பக்கம் எண் :

286தொல்காப்பியம்-உரைவளம்

செயலை யந்தளி ரன்னவென்
மதனின் மாமெய்ப் பசலையுங் கண்டே” 1      (நற்றிணை-244)

இஃது அறத்தொடு நிற்குமாறு தோழிக்குத் தலைவி கூறியது. இன்னும் அதனானே தோழியைத் தலைவி ஆற்றுவித்தலுங் கொள்க.

“நெகிழ்ந்த தோளும் வாடிய வரியுந்
தளிர்வனப் பிழந்த என்றிறனு நோக்கி
யாஞ்செய்வ தன்றிவள் துயரென வன்பின்
அழாஅல் வாழி தோழி வாழைக்
கொழு மட லகலிலைத் தளிதலைக் கலாவும்
பெருமலை நாடன் கேண்மை நமக்கே
விழுமமாக வறியுந ரின்றெனக்
கூறுவை மன்னோ நீயே
தேறுவென் மன்யா னவருடை நட்பே” 2      (நற்றிணை-309)

எனவரும்.

“துறுகல லயலது மாணை மாக்கொடி
துஞ்சுகளி றிவருங் குன்றநாட


1. கருத்து: நுண்ணிய இடையையும் அல்குலையும் இனிய சொல்லையும் உடையவளே! கழிமுள்ளிப் பூமாலையைக் கூந்தலில் சூடித் தோழியருடன் கடலில் ஆடி என் அரிய இனிய உயிரை வவ்விய நீ யார் என்று நாம் அவனால் வருந்துதலை யறியானாய் நம்மால் அவன் வருந்தியவன்போல் கூறியதும் என்னை யிரந்து நின்றதும் ஆகிய செயல் எனக்கு நகையாகின்றது.

2. கருத்து: தோழீ! என்னுடைய நெகிழ்ந்த தோளையும் புலர்ந்த வரிக் கோலத்தையும் தளிர் அழகை இழந்த என் உடம்பின் பொலிவின்மையும் கண்டு என்னாலல்லவா இவட்கு இவை விளைந்தன என்று என்பால் கொண்ட அன்பால் அழாதே. நாடன் நட்பு நமக்குத் துன்பமாக இருக்கவும் அதை அறிபவர் இல்லையே என்று கூறுவாய். அவருடைய நட்பைப் பற்றி யான் நன்றாகத் தெளிந்துள்ளேன். அதனால் ஆற்றியிருப்பேன்.