னெஞ்சு களனாக நீயலென் யானென நற்றோண் மணந்த ஞான்றை மற்றவன் தாவா வஞ்சின முரைத்தது நோயோ தோழி நின்வயி னானே” 1 (குறுந்-36) இதுவும் அது. வெள். இது தலைவி தன் களவொழுக்கத்தினைத் தோழிக்குத் தானே கூறுதற்குரிய இன்றியமையாமை கூறுகின்றது. (இ-ள்) : ‘எல்லாவற்றினும் சிறந்த உயிரைவிட மகளிர்க்கு நாணம் என்னும் பண்பே இன்றியமையாச் சிறப்பானது: அத்தகைய நாணத்தைவிடக் குற்றமற்ற நல்லறிவின் வெளிப்பாடாகிய கற்புடைமையே இன்றியமையாச் சிறப்பினதாகும்’ என முன்னோர் வாய்மொழியைப் பொருந்திய நெஞ்சத்துடனே தனது காதற்குரிய தலைவன் இருந்த விடத்தே தானே செல்லுதலை விரும்பிய நிலையிலும், தனது பிரிவுத் துயரத்தைப் பொறுக்கும் மனவன்மையின்றித் தலைவன் உள்ள விடத்தே செல்வாம் என்னும் நன்மொழியினைத் தலைவி கூறுதற்கண்ணும் அவைபோன்ற கூற்றுவகை பிறவற்றின் கண்ணும் தலைமகள்பால் காதல் மிகுதியாகிய மிக்க பொருள் தோன்றும். (எ-று). சிவ. இச்சூத்திரம் தலைவி கூற்றிற்குச் சிறப்பில்லன கூறி அவையும் அகப்பொருளாம் என்கின்றது” என நச்சினார்க்கினியர் கூறுவதே பொருந்தும். இளம்பூரணர் கருத்தும் அதுவே. வெள்ளை வாரணனார் “தலைவி தன் களவொழுக்கத்தினைத் தோழிக்குத் தானே கூறுதற்குரிய இன்றியமையாமை கூறுகின்றது” என்றது பொருந்தாது; தலைவன் இருக்குமிடம் செல்லுதலும், செல்வாம் எனத் தோழிக்குக்
1. கருத்து: தோழீ! பொற்றைக் கல்லின் பக்கத்துள்ள மாணை என்னும் கொடி தூங்கும் களிற்றின்மேல் படரும் படியான மலைநாடனானவன் நல்ல தோளை மணந்த காலத்துத் தன் நெஞ்சே அவைக் களமாகக் கொண்டு நின்னைப் பிரியேன் என்று கூறிக் கெடாத சூளுறவு உற்ற நின்னிடத்துத் துன்பம் தருவதாகுமோ! |