கூறுதலும் தோழி களவொழுக்கம் அறிந்து இருவரையும் புணர்த்திய பின்னரே நிகழ்வனவாதலின், அன்றியும் அவனிருக்குமிடம் செல்ல நினைப்பதும் செல்வதும் சொல்வதும் களவில் ஒருவழித்தணத்தல் போலும் செயல்களால் தலைவன் வரவும் வரைவும் நீட்டித்த வழியாதலும் காரணமாம். தோழி கூற்று 112. | நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் | | செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும் புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம் உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும் குறையுறற் கெதிரிய கிழவனை மறையுறப் பெருமையிற் பெயர்ப்பினும் உலகு உரைத்து ஒழிப்பினும் அருமையின் அகற்சியும் அவள் அறிவுறுத்துப் பின்வா என்றலும் பேதைமை ஊட்டலும் முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துரைத்தலும் அஞ்சிஅச் சுறுத்தலும் உரைத்துழிக் கூட்டமொடு எஞ்சாது கிளந்த இருநான்கு கிளவியும் வந்த கிழவனை மாயம் செப்பிப் பொறுத்த காரணம் குறித்த காலையும் புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற் கண்ணும் குறைந்தவட் படரினும் மறைந்து அவள் அருகத் தன்னொடும் அவளொடும் முன்னமுன் தளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும் நன்னயம் பெற்றுளி நயம்புரி இடத்தினும் எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும் புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும் வேளாண் பெருநெறி வேண்டிய இடத்தினும் புணர்ந்துழி உணர்ந்த அறிமடச் சிறப்பினும் ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும் |
|