mother in the two ways of addressing directly and emphasi-sing the virtue, when questioning the delay in marrying after obtaining the consent of the parents, and on insisting to be patient assuring the celebration of the marriage soon-these are the thirty two occassions where the maid makes her expressions. இளம். என்றது, களவொழுக்கத்தின்கண் தோழிக்குரிய கிளவியெல்லாம் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : நாற்றமு.............நாட்டத்தானும் என்பது-நாற்ற முதலாகச் சொல்லப்பட்ட ஏழினானும் புணர்ச்சிக்கு முந்துற்ற நிலைமையை உட்கொண்டு வரும் மனநிகழ்ச்சி யேழினும் புணர்ச்சி யுண்மையறிந்த பின்றை மெய்யினானும் பொய்யினானுந் தலைவி குலத்தினுள்ளார் நிலைமையிற் பிழையாது பலவாகி வேறுபட்ட கவர்த்த பொருண்மையையுடைய ஆராய்தற் கண்ணும் என்றவாறு. நாற்றம் என்பது-பூவினானும் சாந்தினானும் தலைவன் மாட்டுளதாகிய கலவியால் தலைவி மாட்டுளதாய நாறுதல். தோற்றம் என்பது-புணர்ச்சியான் வரும் பொற்பு. ஒழுக்கம் என்பது-ஆயத்தாரொடு வேண்டியவா றொழுகு தலன்றித் தன்னைப் பேணியொழுகுதல். உண்டி என்பது-உண்ணும் அளவிற் குறைதல். செய்வினை மறைத்தல் ஆவது-பூக்கொய்தலும் புனலாடலும் போலும் வினைகளைத் தோழியை மறைத்துத் தனித்து நிகழ்த்துதல். அன்றியும் தலைவன் செய்த புணர்ச்சியாகிய கருமத்தினைப் புலப்பட விடாது தோழியை மறைத்தலும் என்றுமாம். செலவினும் என்பது-எத்திசையினும் சென்று விளையாடுவாள் ஒரு திசையை நோக்கிச் சேறல். பயில்வினும் என்பது-ஓரிடத்துப் பயிலுதல் புணர்ச்சி எதிர்ப்பாடு ஆவது-புணர்வதற்கு முந்துற்ற காலம், உள்ளுறுத்தல் ஆவது-உட்கோடல் |